Search
  • Follow NativePlanet
Share

காரக்பூர் - இரயில்வே நகரம்

7

இந்தியாவிலேயே மிகவும் நீளமான மூன்றாவது இரயில்வே நடைமேடையையும், காரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிலையத்தையும் கொண்டிருக்கும் முதன்மையான கல்வி மையமாக காரக்பூர் விளங்குகிறது. 13000-பேருக்கும் அதிகமான இரயில்வே பணியாளர்கள் தங்கியுள்ள காரக்பூர் இந்தியாவின் மிகப்பெரிய இரயில்வே குடியிருப்பு உள்ள நகரமாகவும் உள்ளது.

காரக்பூரைச் சுற்றிலுமுள்ள பார்வையிடங்கள்

பல்லாண்டு காலமாகவே காரக்பூர் நகரத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் மற்றும் இந்நகர இளம் தலைமுறையின் ஆஸ்தான இடமாகவும் காரக்பூர் ஏரி உள்ளது. அதன் கல்வியின் தாக்கத்துடன், மட்டுமல்லாமல், இந்நகரம் முழுமையான ஊக்கம், வேகம் மற்றும் ஆர்வத்துடனும் உள்ளது.

இந்தியாவில் இந்து – முஸ்லீம் ஒற்றுமையை சிறப்பாக காட்டும் இடங்களில் காரக்பூரும் ஒன்று. இந்த இரண்டு மதத்தவரும் பல்லாண்டு காலமாகவே, இங்கே ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் காளி கோவில் மற்றும் ஷாஹி மசூதி ஆகியவை பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.

காரக்பூரின் உணவும், திருவிழாக்களும்

பெரும்பாலோரின் விரும்பும் இடமாகவும், மாணவர்கள் வந்து குவியும் மையமாகவும் இருக்கும் காரக்பூர், அதன் சுவை மிகுந்த உள்ளூர் உணவு வகைகளுக்காகவும் புகழ் பெற்றுள்ள இடமாகும்.

சாலைகள் ஆங்காங்கே இணையும் இடங்களில் உள்ள கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் சுவையான பெங்காலி உணவுகளும் மற்றும் பிற உணவு வகைகளும் வகையாக பரிமாறப்படுகின்றன.

நீங்கள் இதனை சோதித்து பார்க்கும் எண்ணத்தில் இருந்தால், நேரே காரக்பூர் ஏரிக்கு வந்து, அங்கிருக்கும் சாலையோர கடைகளில் சாப்பிடுங்கள்.

வங்காள மக்கள் அவர்கள் செய்யும் சுவை மிகுந்த கடல் உணவுகள் மற்றும் இனிப்புகளுக்காக புகழ் பெற்றவர்களாவர். இந்த இனிப்புகளில் சிறப்பானவையாக கருதப்படும் சந்தேஷ் மற்றும் இரஸ் மலாய் போன்றவற்றை தவற விட வேண்டாம்!

ஷாப்பிங் மால்களும், பொழுதுபோக்கு அம்சங்களும்

காரக்பூரில் இருக்கும் லெய்ஷர் மல்டிபிளக்ஸ் மற்றும் பல்லடுக்கு வணிக வளாகத்தில் உலப் புகழ் பெற்ற பிராண்ட்களின் கடைகள் மட்டுமல்லாமல், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் காணும் வசதியும் உள்ளது. குறைந்த விலையில் ஷாப்பிங் செய்ய விரும்பும் சுற்றுலாப் பயணிகள் புராடான், கோலே அல்லது கேட் பஜார்களுக்கு செல்லலாம்.

கல்வி மையமாக இருந்து கொண்டே சுற்றுலாவிற்கு மதிப்பளிக்கும் இடமாக இருப்பதில் காரக்பூர் நற்பெயர் பெற்றிருக்கிறது. கொல்கத்தா மற்றும் அருகிலுள்ள பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களிலிருந்து காரில் செல்லும் தூரத்திலேயே உள்ளதும், காரக்பூர் சுற்றுலாவின் சிறப்பம்சமாக உள்ளது.

இங்கிருக்கும் மாணவர்கள் நன்றாக கவனிக்கப்படுவதுடன், உள்ளூர் மக்களுடனும் நன்றாக கலந்து பழக முடியும். வார இறுதி நாட்களில் கொல்கத்தாவிலிருந்து சென்று வர மிகவும் ஏற்ற சுற்றுலாத் தலமாக இது உள்ளது.

காரக்பூரை அடையும் வழிகள்

தென் கிழக்கு இரயில்வேயில் ஹெளராவிற்கு பிறகு மிகவும் சுறுசுறுப்பான இரயில் நிலையமாக காரக்பூர் இரயில் நிலையம் உள்ளது. எனவே தான் காரக்பூருக்கு நல்ல இரயில்வே தொடர்புகள் உள்ளன.

மேலும், சாலை வழியாகவும் கூட காரக்பூர் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காரக்பூருக்கு பேருந்து சேவைகளும் உள்ளன.

காரக்பூருக்கு வர சிறந்த காலம்

குளிர்காலத்தில் காரக்பூருக்கு சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

காரக்பூர் சிறப்பு

காரக்பூர் வானிலை

சிறந்த காலநிலை காரக்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது காரக்பூர்

  • சாலை வழியாக
    131 கிமீ தொலைவிலுள்ள மாநிலத் தலைநகரம் கொல்கத்தா, 6-வது தேசிய நெடுஞ்சாலை வழியாக நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து 2 மணி நேர கார் பயண தூரத்தில் காரக்பூர் உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நாட்டிலேயே மூன்றாவது நீளமான நடைமேடையை கொண்டிருக்கும் காரக்பூர் இரயில் நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களுக்கு நேரடி இரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நாட்டின் பல நகரங்கள் மற்றும் உலகம் முழுவதும் தொடர்பிலுள்ள கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் வழியாக காரக்பூருக்கு எளிதில் சென்றடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Apr,Thu
Check Out
19 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri