Search
  • Follow NativePlanet
Share

கின்னார் - நறுமணம் கமழும் பழத்தோட்ட நகரம்

35

ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் கின்னார் உண்மையில் 'தேவதைகளின் வசிப்பிடம்' என்றழைக்கப்படுகிறது. பனி படர்ந்த மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், செழுமையான பண்ணைகள் மற்றும் அழகிய திராட்சைத் தோட்டங்கள் இந்த இடத்தின் ரம்மியமான தோற்றத்தினை விளக்கும் வகையில் இருக்கும். இவை மட்டுமல்லாமல் வித்தியாசமான பல தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் இங்கே உங்களால் காண முடியும். இந்த மாநிலத்தின் பிற இடங்களில் காணப்படும் கலாச்சாரங்களிலிருந்து மிகவும் மாறுபட்ட திபெத்திய கலாச்சாரத்தை இங்குள்ள மக்கள் பின்பற்றுவதையும் நீங்கள் காண முடியும்.

சங்லா பள்ளத்தாக்கு மற்றும் ஹங்க்ராங் பள்ளத்தாக்கு ஆகிய இரண்டும் கின்னாரில் அமைந்துள்ள முக்கியமான பள்ளத்தாக்குகளாகும். சங்லா பள்ளத்தாக்கு அதன் பழத் தோட்டங்களுக்காகவும், ஹங்க்ராங் பள்ளத்தாக்கு அதன் மேய்ச்சல் நிலங்களுக்காகவும் மிகவும் அறியப்படும் இடங்களாகும்.

சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தின் மிகவும் புகழ் பெற்ற பார்வையிடமாக கருதப்படும் கின்னார் கைலாஷ் மலையையும் காணலாம். இது மட்டுமல்லாமல் இயற்கையழகிற்காக அறியப்படும் கல்பா கிராமத்திற்கும் சென்று வரலாம்.

கின்னாருக்கு மிக அருகில் இருக்கும் விமான தளம், கல்பா நகரத்திலிருந்து 249 கிமீ தொலைவில் உள்ள சிம்லாவில் உள்ளது. சிம்லா விமான நிலையம் டெல்லி, சண்டிகர், மற்றும் இதர பல முக்கிய இந்திய நகரங்களுக்கும நேரடி தொடர்பை பெற்றுள்ள இடமாகும்.

கின்னாருக்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் 230 கிமீ தொலைவில் உள்ள சிம்லா இரயில் நிலையம் ஆகும். ராம்பூர் மற்றும் சிம்லா ஆகிய இடங்களிலிருந்து கின்னாருக்கு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கின்னாரின் பருவநிலை வருடம் முழுவதும் மிதமானதாக இருக்கும். கோடைகாலம் ஜீன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வரும். அக்டோபர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் மே மாதம் வரை நீண்டு கடுங்குளிரை உருவாக்க கூடியதாக இருக்கும்.

இந்த நாட்களில் மெர்குரியின் அளவு பூஜ்யத்திற்கும் குறைவாக சென்று விடும். எந்த பருவநிலையானாலும் கின்னாருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடிமனான கம்பளி உடைகளை எடுத்து வருவது நல்லதாகும்.

கின்னார் சிறப்பு

கின்னார் வானிலை

சிறந்த காலநிலை கின்னார்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கின்னார்

  • சாலை வழியாக
    சிம்லா மற்றும் ராம்பூர் போன்ற அருகிலுள்ள நகரங்களிலிருந்து கின்னார் நகரத்திற்கு பஸ் வசதிகளும் உண்டு. குறைந்த செலவில் பஸ் மற்றும் டாக்ஸிகளை இங்கிருந்து அமர்த்திக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கின்னாருக்கு அருகில் உள்ள இரயில் நிலையம் 230 கிமீ தொலைவில் சிம்லாவில் உள்ளது. இந்த இரயில் நிலையம் டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களுடன் நன்றாக தொடர்பு பெற்றுள்ளது. இரயில் நிலையத்திற்கு வெளியிலேயே சுற்றுலாப்பயணிகள் டாக்ஸிகள் மற்றும் வாடகை கார்களை அமர்த்திக் கொண்டு கின்னாரை நோக்கி பயணிக்கலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கின்னாரின் தலைமை கிராமப்பகுதியான கல்பா-வில் இருந்து 249 கிமீ தொலைவில் சிம்லா விமான நிலையம் உள்ளது. சிம்லா விமானநிலையம் டெல்லி மற்றும் குல்லு போன்ற முக்கிய நகரங்களுடன் நேரடி விமான தொடர்பு உடைய இடமாகும். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் டெல்லி வழியாக செல்லும் இணைப்பு விமானங்களை பயன்படுத்தலாம். விமான நிலையத்திலிருந்து கின்னார் செல்வதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு வாடகை கார்கள் மற்றும் டாக்ஸிகள் நிறைய உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat