குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா என்றழைக்கப்படும் இந்த சீக்கிய குருத்வாரா கோயில் கொச்சியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. இது கேரள மாநிலத்திலுள்ள ஒரே குருத்வாரா என்பது குறிப்பிடத்தக்கது.
இது 1955ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குருத்வாரா எனும் பெயருக்கு குருவை நோக்கி இட்டுச்செல்லும் வாசல் என்பது பொருளாகும். ஆரம்பத்தில் கொச்சின் கப்பற்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த சீக்கியக்கோயில் பின்னர் 1975ம் ஆண்டில் தற்போதுள்ள இடத்தில் மறுநிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
முகலாயபாணி கட்டிடக்கலை அம்சங்களுடனும், ஹிந்து மற்றும் இஸ்லாமிய கலையம்சங்களுடனும் இந்த குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தர்பார் ஹால் எனப்படும் வழிபாட்டு கூடத்திற்கு எல்லாப் பிரிவைச் சேர்ந்தவர்களும் வருகை தந்து வழிபடுவது இதன் சிறப்பம்சமாகும். சீக்கிய இனத்தாரின் கலாச்சாரத்தையும், உபசரிப்பையும் புரிந்துகொள்ள இந்த குருத்வாராவுக்கு தயங்காமல் விஜயம் செய்வது அவசியம்.