சுபாஷ் பார்க் என்று அழைக்கப்படுகிற இந்த ‘சுபாஷ் சந்திர போஸ் பார்க்’ கொச்சி நகரத்தில் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாகும். இது கொச்சியின் மையப்பகுதியில் மஹாராஜா கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரத்திலேயே உள்ள இந்த பூங்காவை சாலை மார்க்கமாகவும் எளிதில் சென்றடையலாம்.
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான இந்த பூங்கா தேசவிடுதலை தலைவரான ‘சுபாஷ் சந்திர போஸ்’ பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பூங்காவிலிருந்து வேம்பநாட் ஏரி நீர்த்தேக்கம் மற்றும் கொச்சி கப்பல்தளம் போன்றவற்றை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
எர்ணாகுளத்தப்பன் என்றழைக்கப்படும் சிவன் கோயில், தர்பார் ஹால், கொச்சி சிட்டி ஃபெர்ரி மற்றும் மரைன் டிரைவ் போன்ற இதர சுற்றுலா அம்சங்களும் இந்த பூங்காவுக்கு அருகிலேயே காணப்படுகின்றன.
இங்கு அருகிலேயே 'சில்ட்ரன்ஸ் டிராஃபிக் பார்க்’ எனும் மற்றொரு சிறு பூங்காவும் குழந்தைகள் விளையாடவும் போக்குவரத்து விதிகளை கற்றுக்கொள்ளவும் ஏற்ற விதத்தில் அமைந்துள்ளது.
தவிர ஒரு ரோலர் ஸ்கேட் தளமும் இங்கு அமைந்துள்ளது. ஸ்கேட் செய்பவர்களுக்கு மட்டுமன்றி பார்வையாளர்களுக்கும் பரவசமூட்டும் இடமாக இது திகழ்கிறது. இன்னும் நன்றாக இந்த பூங்காவை அழகுபடுத்துவதற்காக புதிய திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன.