உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

கொடசத்ரி – கடின நெஞ்சம் படைத்தவர்களுக்கு

கடல் மட்டத்திலிருந்து 1343 மீட்டர் உயரத்தில் உள்ள கொடசத்ரி மலைப்பிரதேசம் இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலைக் கொண்டுள்ளது. அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள கொடசத்ரி மலைச்சிகரத்தை உள்ளடக்கிய இந்த ஸ்தலம் கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் மூகாம்பிகா தேசிய வனப்பகுதியில் அமைந்துள்ளது. பெங்களூர் நகரத்திலிருந்து 400 கி.மீ தூரத்தில் இது உள்ளது.

கொடசத்ரி புகைப்படங்கள் - கொடசத்ரி
Rajesh Kunnoth
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

 

காட்டு நடைப்பாதைகள் மற்றும் இதர இயற்கை அம்சங்கள்

தொடர்ந்து வீசும் வலிமையான காற்றின் காரணமாக தாவரங்கள் ஏதுமற்ற மலையுச்சியில் இந்த மூகாம்பிகை அம்மன் கோயில் அமைந்துள்ளது. சூழ்ந்துள்ள காடுகளில் பல அரிய வகை தாவரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் நிறைந்துள்ளன.

மேலும் இந்த காட்டினுள் ஒரு அற்புதமான மலையேற்றப் பாதையும் அமைந்துள்ளது. கொஞ்சம் சிரமம் என்றாலும் இந்தப்பாதையில் மலையேற்றம் பழகாத பயணிகளும் ஏறலாம். வசீகரமான இயற்கை எழிலைக்கொண்டுள்ள கொடசத்ரி வனப்பகுதியில் மலபார் கருங்குரங்கு, ராஜ நாகம், கழுதைப்புலி, காட்டெருமை மற்றும் மலைப்பாம்புகள் போன்றவை வசிக்கின்றன.

சர்வஜனபீடம் என்று பிரசித்தமாக அழைக்கப்படும் இந்த கொடசத்ரி புகழ் பெற்ற இந்து குருவான சங்கராச்சாரியார் தியானத்தில் ஈடுபட்ட ஸ்தலம் என்பதால் பிரசித்தமாக அறியப்படுகிறது.

கொடசத்ரிக்கு விஜயம் செய்ய அக்டோபரிலிருந்து மார்ச் வரையிலான காலம் உகந்ததாகும். கடினமான இந்த மலைப்பாதைகளில் ஜீப்புகளின் மூலமே பயணிக்க முடியும். கொல்லூரிலிருந்து ஜீப்புகள் வாடகைக்கு கிடைக்கின்றன. அடர்ந்த கொடசத்ரி காடுகளில் அட்டைகளின் தொல்லை அதிகம் என்பது பயணிகள் கவனமுடன் இருப்பது அவசியம்.

Please Wait while comments are loading...