Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» கொடைக்கானல்

கொடைக்கானல் - தென்னிந்தியாவின் காஷ்மீர்!

36

கொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம்  மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை "மலைகளின் இளவரசி" என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாழிடம் கடல்  மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.

கொடைக்கானல், பரப்பர் மற்றும் குண்டர் பள்ளத்தாக்கிற்கு மத்தியில் அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு வடக்கே மலை இறங்கினால் வில்பட்டி மற்றும் பள்ளங்கி என்ற கிராமங்கள் உள்ளன.

கிழக்கை நோக்கி மலை இறங்கினால் முருகனின் பழனி மலையை அடையலாம். கொடைக்கானலுக்கு தெற்கே கம்பம் பள்ளத்தாக்கு உள்ளது. அதே போல் மேற்கே சென்றால் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு மற்றும் அண்ணாமலையை அடையலாம்.

"கானகத்தின் கொடை" அல்லது "காடுகளின் பரிசு" என்பது கொடைக்கானல்  என்பதன் தமிழ் அர்த்தம். இருப்பினும் கோடை என்ற வார்த்தைக்கு நான்கு  அர்த்தங்கள் உள்ளதால் கொடைக்கானல் என்பதற்கு அர்த்தத்தை நான்கு விதமாக எடுத்துக் கொள்ளலாம். அவைகள் "வனத்தின் முடிவு", "படர்க்கொடி அடங்கிய காடு", "கோடைக்காலத்து காடு" மற்றும் "காடுகளின் பரிசு".

கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக புதிதாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிற இடம் இது. அடர்ந்த காட்டிற்குள் மரங்கள், பாறைகள் மற்றும் அருவிகளோடு இயற்கை அழகுடன் இருக்கும் கொடைக்கானல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தலம்.

கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள்,  வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. மேலும் இங்குள்ள பல கிறிஸ்துவ ஆலயங்களை கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்.

ப்ளம்ஸ் மற்றும் பேரிக்காய் போன்ற பழங்களுக்கும் கொடைக்கானல் புகழ் பெற்றது. சாக்லேட் விரும்பிகளின் சொர்க்கம் கொடைக்கானல். இங்கே வீட்டில் தயார் செய்யும் சாக்லேட்கள் பல கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

யூக்கலிப்டஸ் மூலிகை தைலம் இங்கே அதிகமாக தயாரிக்கப்படுகின்றன. அறிய வகை பூவான 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை இங்கே காணலாம்.

மேலும் இங்கே நடை பயணம், படகு சவாரி, குதிரை சவாரி மற்றும் மிதிவண்டி பயணம் போன்ற பலதரப்பட்ட தீரச்செயல் மிக்க விளையாட்டுக்களை விளையாடி மகிழலாம்.

கொடைக்கானல் வரலாற்றின் ஒரு முன்னோட்டம்!

கொடைக்கானல் மலையில் முதலில் குடியேறியவர்கள் பலையர் பழங்குடி மக்கள். இந்த இடம் கிறிஸ்துவ காலத்து இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள்,  லெப்டினென்டு பி.எஸ்.வார்ட் கட்டுப்பாட்டில், இங்கு முதன் முதலில் அடியெடுத்து வைத்தது 1821-ஆம் வருடம்.

1845 ஆம் வருடம் அவர்களால் இந்நகரம் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. பின்னர் 20-ஆம் நூற்றாண்டில் பல இந்திய பிரஜைகள் இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

கொடைக்கானலை அடைவது எப்படி?

கொடைக்கானலுக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் 120 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம். மதுரை விமான நிலையம் கோயம்புத்தூர் மற்றும் சென்னை விமான நிலையங்களுடன் சேவையில் உள்ளது.

கொடைரோடு ரயில் நிலையம் தான் கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கும் ரயில் நிலையம். கோயம்புத்தூர் சந்திப்பு கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கும் பெரிய ரயில் நிலையம் ஆகும்.

இங்கிருந்து பெங்களூரு, மும்பை, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கொடைக்கானலின் வானிலை

வருடம் முழுவதும் கொடைக்கானலில் தட்ப வெப்பநிலை இனிமையாக   இருக்கும். கொடைக்கானல் செல்ல சிறந்த காலம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையும், பின் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை. ஜூனிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பச்சை பசுமையாய் காட்சி அளிப்பதால் அப்போதும் கொடைக்கானல் சென்று மகிழலாம்.

கொடைக்கானல் சிறப்பு

கொடைக்கானல் வானிலை

சிறந்த காலநிலை கொடைக்கானல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கொடைக்கானல்

  • சாலை வழியாக
    கொடைக்கானலில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், பெங்களூரு, திருச்சி மற்றும் சென்னைக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்தில் பயணம் செய்வது செலவை குறைத்து சுகமான அனுபவத்தை தரும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கொடைக்கானலில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள கொடைரோடு தான் மிக அருகாமையில் உள்ள ரயில் நிலையம். இருப்பினும் அருகில் இருக்கும் மிகப்பெரிய ரயில் சந்திப்பு கோயம்புத்தூரில் உள்ளது. இங்கிருந்து டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் நாட்டிலுள்ள பல நகரங்களுக்கும் சென்று வரும் வசதி உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொடைக்கானலுக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மதுரை விமான நிலையமே. இந்த விமான நிலையம் மூலியமாக கோயம்புத்தூர் மற்றும் சென்னைக்கு செல்ல வசதிகள் உண்டு. சென்னை விமான நிலையம் தான் கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கிருந்து இந்தியாவிலுள்ள மற்ற முக்கிய நகரங்களுக்கும் உலகத்தில் உள்ள மற்ற இடங்களுக்கும் செல்ல வசதிகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu