Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோஹிமா » வானிலை

கோஹிமா வானிலை

வருடம் முழுவதுமே ஈரப்பதமான-மிதவெப்ப பருவநிலையை கோஹிமா பெற்றிருக்கிறது.

கோடைகாலம்

மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைக்காலத்தில் கோஹிமா நகரம் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. இந்நாட்களில் கோஹிமாவின் அதிகபட்ச வெப்பநிலை 25°C வரை மட்டுமே இருக்கும்.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலத்தில் ஜாஃபு பாரய்ல் பகுதியில் உள்ள கோஹிமாவில் பெருமளவிலான மழைப்பொழிவு பொழியும். இந்நாட்களில் பொழியும் சராசரி மழைப்பொழிவு 300 மிமீ அளவாக இருக்கும். இதன் காரணமாக இந்த நகரத்தின் அழகு அதிகரித்து, காண்பவர்களுக்கு அது மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும்.

குளிர்காலம்

கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் அமைந்திருப்பதால் கோஹிமாவின் குளிர்கால வெப்பநிலை நவம்பர் மாதத்தில் குறையத் தொடங்கி, பிப்ரவரி மாதம் வரை குறைவானதாகவே இருக்கும். இந்நாட்களில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலைகளாக முறையே 8°C மற்றும் 16°C அளவுகளில் இருக்கும். இந்நாட்களில் குறைவான அளவு மழைப்பொழிவும் அவ்வப்போது நிகழும். இந்த நாட்களில் தான் கோஹிமாவின் புகழ் பெற்ற ஹார்ன்பில் திருவிழா நடத்தப்படுகிறது.