Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்லம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம்

    சுற்றுலாப்பயணிகள் இயற்கையின் களங்கமடையாத வனப்பை வெகு அருகில் தரிசிக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை இந்த அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம் வழங்குகிறது.

    அஷ்டமுடி எனும் நன்னீர் ஏரியின் நீட்சியாக இந்த உப்பங்கழி தோன்றியுள்ளது. இது கேரளாவிலேயே மிகப்பெரிய நன்னீர்...

    + மேலும் படிக்க
  • 02கொல்லம் பீச்

    கொல்லம் பீச் அல்லது மஹாத்மா காந்தி பீச் என்று அழைக்கப்படுகிற இந்த கொல்லம் கடற்கரையானது நீண்டு பரந்திருக்கும் மணற்பரப்புடன் கூடிய கண்களை கொள்ளை கொள்ளும் ஒரு கடற்கரையாகும். கொல்லம் பகுதியின் முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாக அறியப்படும் இந்த கடற்கரையானது கொல்லம் நகர...

    + மேலும் படிக்க
  • 03திருமுல்லாவரம் பீச்

    திருமுல்லாவரம் பீச்

    கொல்லம் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த திருமுல்லாவரம் பீச் எனும் கடற்கரைப்பகுதியானது அழகிய மணற்பிரதேசத்துடன் வணிக ஆரவாரங்களால் பாதிப்படையாமல் காட்சியளிக்கிறது.

    ஆழம் குறைந்த நீர்ப்பகுதி என்பதால் பயமில்லாமல் பயணிகள் குழந்தைகளுடன் இந்த கடற்கரையில்...

    + மேலும் படிக்க
  • 04அட்வெஞ்சர் பார்க்

    அட்வெஞ்சர் பார்க்

    கொல்லம் நகரின் மையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த அட்வெஞ்சர் பார்க் எனப்படும் பிக்னிக் ஸ்பாட் அமைந்துள்ளது. அஷ்டமுடி ஏரிக்கரையில் உள்ள இந்த சிற்றுலாத்தலம் உல்லாசமாக பொழுதுபோக்குவதற்கும் ஏற்ற இடமாக காணப்படுகிறது. கொல்லம் நகருக்கு வருகை தரும் பயணிகள் மறக்காமல்...

    + மேலும் படிக்க
  • 05மயநாட்

    கொல்லம் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் கொல்லம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் இந்த மயநாட் ஆகும். கொல்லம் மற்றும் கோட்டயம் நகரங்களிலிருந்து இந்த கிராமத்துக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

    பரவூர் ஏரியின் கரையில் இந்த ரம்மியமான கிராமம்...

    + மேலும் படிக்க
  • 06அலுங்கடவு படகு கட்டுமான தளம்

    அலுங்கடவு படகு கட்டுமான தளம்

    அலுங்கடவு எனும் இடத்திலுள்ள இந்த படகு கட்டுமான தளத்தில் பயணிகள் விதவிதமான படகுகளும், படகு வீடுகளும் கட்டமைக்கப்படும் அற்புதமான காட்சிகளை பார்க்கலாம்.

    கொல்லம் நகரிலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ள அலுங்கடவு கிராமம் உப்பங்கழி நீர்த்தேக்கத்தை ஒட்டியே...

    + மேலும் படிக்க
  • 07நீண்டகரா துறைமுகம்

    நீண்டகரா துறைமுகம்

    கொல்லம் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த நீண்டகரா துறைமுகம் என்றழைக்கப்படும் முக்கியமான கடற்துறைமுகம் மற்றும் மீன்பிடி துறை அமைந்துள்ளது. ‘இந்தோ நார்வீஜியன் ஃபிஷரீஸ் கம்யூனிட்டி ப்ராஜக்ட்’ எனும் திட்டத்தின் தலைமையகமாக விளங்கும் இந்த இடம்...

    + மேலும் படிக்க
  • 08தேவல்லி அரண்மனை

    தேவல்லி பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த தேவல்லி அரண்மனை கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் ஒரு பிரசித்தமான பாரம்பரிய மாளிகையாகும். இது கொல்லம் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

    படகுவீடு மூலமாக அஷ்டமுடி ஏரியில் பயணம் செய்து...

    + மேலும் படிக்க
  • 09தங்கசேரி பீச்

    கொல்லம் நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தங்கசேரி பீச் எனும் கடற்கரைப்பகுதி ஒரு அற்புதமான பிக்னிக் ஸ்தலமாகும். மணற்பாங்கான இந்த கடற்கரைப்பகுதியில் புராதனமான போர்த்துகீசிய கோட்டையின் சிதிலங்கள் காணப்படுவதால் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...

    + மேலும் படிக்க
  • 10ராமேஷ்வரா கோயில்

    ராமேஷ்வரா கோயில்

    கொல்லம் பகுதியின் முக்கிய கோயில்களில் ஒன்றான இது கொல்லம் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ளது. தனது அற்புதமான கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் உன்னதமான சிற்பங்களின் மூலம் நூற்றுக்கணக்கான பக்தர்களை இது தினமும் ஈர்க்கிறது.

    பாண்டியர் கால கோயிற்சிற்பக்கலை...

    + மேலும் படிக்க
  • 11அமிர்தபுரி

    அமிர்தபுரி

    கொல்லம் நகரிலிருந்து 30 கி.மீ தூரத்தில் வல்லிக்காவு எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த அமிர்தபுரி எனும் ஆன்மீக மையம் சமீப காலமாக ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.

    இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் மீனவக்கிராமமான வல்லிக்காவு மாதா...

    + மேலும் படிக்க
  • 12மன்ரோ ஐலேண்ட்

    மன்ரோ துருத் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மன்ரோ தீவுப்பகுதி எட்டு குட்டி தீவுகளை உள்ளடக்கியுள்ளது. கொல்லம் நகரிலிருந்து 27 கி.மீ தூரத்திலுள்ளது.

    ஆங்கிலேயர் காலத்தில் இப்பகுதியின் வளர்ச்சிக்கு வித்திட்ட கர்னல் ஜான் மன்ரோ என்ற அதிகாரியின்...

    + மேலும் படிக்க
  • 13அச்சன்கோயில்

    அச்சன்கோயில்

    கேரளாவின் முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகவும் அதே சமயம் ஒரு இயற்கை எழிற்பிரதேசமாகவும் அறியப்படுகிற இந்த அச்சன்கோயில் ஸ்தலம் கொல்லத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. அடர்த்தியான வனப்பகுதிகள், கோயில்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இப்பிரதேசம்...

    + மேலும் படிக்க
  • 14ஓச்சிரா

    ஓச்சிரா எனும் இந்த சிறிய நகரமானது ஆலப்புழா மற்றும் கொல்லம் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் கொல்லம் நகரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகவும், யாத்திரை ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ள இந்நகரத்தில் எண்ணற்ற புராதனக்கோயில்களும்...

    + மேலும் படிக்க
  • 15சாஸ்தாம்கொட்டா ஏரி

    சாஸ்தாம்கொட்டா ஏரி

    சாஸ்தாம்கொட்டா ஏரி எனும் இந்த பிரம்மாண்ட நன்னீர் ஏரியானது தன் இயற்கை எழில் மற்றும் படகுவீடு வசதிகள் போன்றவற்றுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. ஏரியின் கரையில் அமைந்துள்ள பிரசித்தமான சாஸ்தா கோயிலின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. மீன் வளர்ப்புக்கும், கொல்லம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu