முனிராபாத் புராணரீதியாக புகழ்பெற்ற ஸ்தலமாகும். இங்கு துங்கபத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முனிராபாத் அணை, மற்றும் ரிஷ்யமூக் மலைகள், பலி கிலா மற்றும் பம்பா சரோவர் போன்ற சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன.
ஹுலிகெம்மா கோயிலில் ஹுலிகெம்மா தெய்வம் வணங்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டின் மூலம் இது 11ம் நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தை சேர்ந்த நான்காம் விக்கிரமாதித்தனால் சதுர்வேதி பட்டாவுக்கு கையளிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.பயணிகள் பக்தர்களும் இங்கு கோயில் வாசலில் ஒரு மிகப்பெரிய ஸ்தம்பத்தை காணலாம். 25 அடி உயரம் உள்ள இந்த துவஜஸ்தம்பம் கலையம்சத்துடன் காணப்படுகிறது. இங்கு வருடாந்திர திருவிழாவும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றனர்.பயணிகள் ஹுலிகெம்மா கோயிலுக்கு ரயில் அல்லது பேருந்து மூலமக செல்லலாம். அருகாமையிலுள்ள எல்ல முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. ஹோஸ்பேட் ரயில் சந்திப்பு இந்த ஸ்தலத்துக்கு அருகிலுள்ள ரயில் நிலையமாகும்.