வரலாற்றுக்காலத்தை சேர்ந்த பல கட்டிடச்சின்னங்கள் குக்கனூரில் காணப்படுகின்றன. பல தொன்மை வாய்ந்த கோயில்களும் இங்கு நிறைந்துள்ளன. புகழ்பெற்ற கோயில்களான நவலிங்கக் கோயில், கல்லேஷ்வர கோயில், மல்லிகார்ஜுனா கோயில் மற்றும் மஹாமயா கோயில் போன்றவை இங்கு அமைந்துள்ளன.
நவலிங்கா கோயில் இங்குள்ள கல்வெட்டுக்குறிப்புகளுக்காகவும் 9 ம் நூற்றாண்டைச்சேர்ந்த சிற்பத்துக்காகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. பெயருக்கேற்ப இங்கு 9 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. மேலும் குக்கனூரிலுள்ள மஹாமயா கோயில் மஹாபாரதக்காவியத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.குக்கனூர் நகரம் கொப்பல் மாவட்டத்தில் யெல்பர்கா தாலுக்காவில் கொப்பல் நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. யேல்பர்கா மற்றும் கொப்பல் தவிர குஷ்டகி மற்றும் கங்கவதி போன்ற நகரங்களும் குக்கனூருக்குஅருகில் அமைந்துள்ளன.இந்த நான்கு நகரங்களுடனும் குக்கனூர் நல்ல சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளதுடன் அதிகமான பஸ் வசதிகளையும் கொண்டுள்ளது.டாக்சி, ஆட்டோ போன்றவை அதிகக்கட்டணம் என்றாலும் பயணிகள் இவற்றின் மூலம் சீக்கிரம் பயணிக்கலாம். குக்கனூருக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக பன்னிகொப்பா ரயில் நிலையம் 7 மைல் தூரத்தில் உள்ளது.