உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

நேரு பூங்கா, கோத்தகிரி

பரிந்துரைக்கப்பட்டது

நேரு பூங்கா கோத்தகிரி நகரத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது.  இந்த தனியார் பூங்கா பயணிகளுக்கு ஓய்வு நேரத்தை கழிப்பதற்கான பல நடவடிக்கைகளை கொண்டுள்ளது.

இந்தப் பூங்காவினுள் கோத்தகிரியின் பூர்வீக குடிகளான கோத்தர்களின் கோயில் ஒன்று உள்ளது. இந்தப் பூங்காவினுள் மக்கள் கூடுவதற்கான மையம் ஒன்றும் , தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவாக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றும் உள்ளது.

பொதுமக்கள் உபயோகத்திற்கான விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. வெள்ளப் பாதுகாப்புக்கென அமைக்கப்பட்ட அரங்கம் ஒன்று உள் விளையாட்டு அரங்காக பயன்படுகிறது.

இந்தப் பூங்கா முக்கியமாக பல கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதற்கும் உள் விளையாட்டு அரங்கமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் பூக்களின் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தக் கண்காட்சி நீலகிரியில் மட்டுமே வளரும் பல அரிய வகைப் பூக்களை , குறிப்பாக அரிய வகை ரோஜாக்களை பார்வைக்கு வைப்பதற்கு பெயர் பெற்றது. சமீப காலமாக கோத்தகிரியில் விளையும் அரிய காய்கறி வகைகளை பார்வைக்கு வைப்பதற்காக காய்கறி கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
Please Wait while comments are loading...