Want to share your reaction with friends?
ஹால்சியோன் கேஸ்சில், கோவளம்
ஹால்சியோன் கேஸ்சில் எனும் இந்த மாளிகை திருவாங்கூர் மஹாராணி சேது லட்சுமி பாயி என்பவருக்காக அவரது கணவர் ஸ்ரீ ராம வர்மா வலியக்கோயில் தம்புரான் என்பவரால் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.
1932ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை அழகம்சங்கள் நிறைந்து கோட்டை போன்று கம்பீரமாக காட்சியளிக்கின்றது. ஒருகாலத்தில் சமஸ்தானமாக விளங்கிய திருவாங்கூர் மண்டலத்தில் இது அமைந்திருக்கிறது. ராஜ குடும்பத்தினருக்கான பிரத்யேக ஓய்வு மாளிகையாக பயன்படுத்துவதற்காக இது அக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும், 1964ம் ஆண்டில் திருவாங்கூர் ராஜ குடும்பத்தாரால் இந்த ஹால்சியோன் கேஸ்சில் மாளிகை கேரள அரசாங்கத்துக்கு விற்கப்பட்டுவிட்டது. தற்சமயம் இந்த மாளிகையானது இப்பகுதியிலுள்ள ஒரே பாரம்பரிய விடுதி எனும் புகழுடன் இயங்கி வருகிறது.
கோவளம் அரண்மனை என்ற பெயரில் இந்த மாளிகை ‘கோவளம் இன்டர்நேஷனம் பீச் ரிசார்ட்’ வளாகத்திலேயே இடம் பெற்றுள்ளது. இந்த பாரம்பரிய விடுதியை பிரபலமான ‘லீலா குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்’ நிறுவனம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியாக நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
