உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

பழசிராஜா மியூசியம், கோழிக்கோடு

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

கோழிக்கோடு நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஈஸ்ட் ஹில் எனும் இடத்திலுள்ள இந்த பழசிராஜா மியூசியம் கலாரசிகர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களும் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடமாகும்.

கோழிக்கோடு புகைப்படங்கள் - பழசிராஜா மியூசியம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

பல அற்புதமான வரலாற்று அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பக்கத்திலேயே ஒரு ஆர்ட் கேலரி அல்லது ஓவியக்கூடம் அமைந்துள்ளது.

இதில் புகழ்பெற்ற கேரள ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவரது உறவினரும், குருவும் ஆன ராஜ ராஜ வர்மாவின் ஓவியங்களும் இந்த காட்சிக்கூடத்தில் காணப்படுகின்றன.

இந்த அருங்காட்சியகம் கேரள மாநில தொல்லியல் துறையினரால் நிர்வகிக்கப்படுகிறது. வரலாற்று ஆர்வலர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் இந்த அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்கின்றனர்.

பல சுவரோவியங்கள், புராதன நாணயங்கள், பழமையான செப்புச்சிலைகள், கோயில் மாதிரி வடிவங்கள், குடக்கல்லு எனப்படும் ராஜ சமாதிக்கற்கள், அடக்க தாழிகள் மற்றும் பல எண்ணற்ற வரலாற்று பொக்கிஷங்களை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.

இந்த அருங்காட்சியகமும், கலைக்கூடமும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும்படி அமைந்துள்ளது. திங்கள்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து தினமும் காலை 9 மணியிலிருந்து மாலை 4.30 வரை இவை திறக்கப்படுகின்றன.

Please Wait while comments are loading...