Search
  • Follow NativePlanet
Share

குதுரேமுக் - ஒரு வித்தியாசமான சுற்றுலாஸ்தலம்

19

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குதுரேமுக் ஒரு புகழ்பெற்ற மலைவாசஸ்தலமாகும். இது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது.  மடிப்பு மடிப்பாக  பசும்புல்வெளிப் பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளுமாக காட்சியளிக்கும் இப்பிரதேசம் ஒரு ‘உயிரியல் பன்முகத்தன்மை’ கொண்ட ஸ்தலமாக அறியப்படுகிறது.

 

அலையலையாய் பசுமைப் பள்ளத்தாக்குகள்

குதுரேமுக் தேசியப்பூங்காவானது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாகும். இது 600 ச.கி.மீ பரப்பளவில் பசுமைப் பள்ளத்தாக்குகளையும், பசுமை மாறாக்காடுகளையும் கொண்டுள்ளது. இப்பிரதேசம் வருடந்தோறும் 7000 மிமீ மழைப்பொழிவைப்பெறுகிறது.

இந்த மழைப்பொழிவுடன் நீர் சேகரிப்பு குணங்களைக்கொண்ட புல்வெளிப் பள்ளத்தாக்குகளையும் கொண்டிருப்பதால் வற்றாத ஆறுகளான துங்கா, பத்ரா மற்றும் நேத்ராவதி ஆறுகள் இங்கிருந்து உற்பத்தியாகின்றன.

ஈரப்பதம் நிறைந்த பருவநிலையும் அடர்த்தியான கானகமும் பல வகையான காட்டுயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை இங்கு ஏற்படுத்தியுள்ளது. இங்கு காட்டெருமைஃப்கள், புள்ளி மான், குரைக்கும் மான், சாம்பார் மான், மலபார் ராட்சத அணில், பறக்கும் அணில், லாங்குர் குரங்குகள், இந்திய குரங்குகள், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் கீரி போன்ற ஏராளமான வன விலங்குகள் இந்த வனவிலங்கு பூங்காவில் நிறைந்துள்ளன. ஒட்டியுள்ள அடர்ந்த கானகத்தில் புலிகள், சிறுத்தைகள், குள்ளநரிகள் மற்றும் காட்டு நாய் போன்ற வேட்டை விலங்குகளும் வாழ்கின்றன.

குதுரேமுக் பகுதியை சுற்றுலாப்பயணிகள் விரும்புவதற்கான காரணங்கள்

குதுரேமுக் பகுதியில் ஏராளாமான சுற்றுலா அம்சங்கள் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளன. அவற்றில் லக்யா அணை, ராதா கிருஷ்ணா கோயில், கங்கமூலா மலை மற்றும் ஹனுமான் குந்தி நீர்வீழ்ச்சி  போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த நீர்வீழ்ச்சி 100 அடி உயரத்திலிருந்து ஒரு பாறை அமைப்பில் மீது வீழ்கிறது. இந்த அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் ஸ்தலம் குதுரேமுக் பயணத்தின்போது ஒரு சிற்றுலாவாக (பிக்னிக்) செல்வதற்கு ஏற்றது.

பலவிதமான இயற்கை சூழலைக்கொன்டுள்ள குதுரேமுக் பகுதியில் மலையேற்றப்பாதைகள் நிறைய உள்ளன. இவற்றில் பயணம் மேற்கொள்ள நீங்கள் காட்டிலாகா துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றாலும் இந்த  சிரமம் காட்டுக்குள் கிடைக்கும் அற்புத அனுபவத்துடன் ஒப்பிடும்போது ஓன்றுமேயில்லை.

குத்ரேமுக்கில் உள்ள எல்லா மலையேற்றப்பாதைகளும் லோபோ எனும் இடத்திலிருந்தே துவங்குகின்றன. இந்த இடம் காட்டுக்குள் குதுரேமுக் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் இந்த இடம் ‘சைமன் லோபோ’ என்பவருக்கு சொந்தமாக இருந்து பல உரிமையாளர்களை கண்டிருந்த போதிலும் இன்னமும் ‘லோபோ’ஸ் ஸ்பாட்’ என்றே அறியப்படுகிறது. இங்கு காட்டுக்குள் வளைந்து நெளிந்து நடைபாதைகளில் சுற்றியுள்ள இயற்கை எழிலை ரசித்தபடியே நடப்பது ஒரு அற்புத அனுபவம்.

பலவிதமான ஆக்கிரமிப்பு முனைப்புகள் நிகழ்கின்ற போதிலும் குதுரேமுக் இன்றும் ஒரு வசீகரமான சுற்றுலாப்பிரதேசமாக தன் இயற்கை வனப்பை எவ்விதத்திலும் இழக்காமல் திகழ்கிறது. ஓய்வான விடுமுறைக்கும், சாகசப்பயணத்துக்கும் ஏற்ற பல்வித அம்சங்கல் நிறைந்த ஒரு மலைவாசஸ்தல சுற்றுலா மையமாக இது புகழ்பெற்றுள்ளது.

பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டியிருக்கும் என்றாலும் இங்கு ஒரு முறை விஜயம் செய்தால் இயற்கை எழில், சாகச பொழுத்போக்குகள், ஆன்மிக ஸ்தல தரிசனங்கள் போன்ற எல்லா அனுபவங்களையும் சுற்றுலா பயணிகள் பெறலாம்.

குதுரேமுக் சிறப்பு

குதுரேமுக் வானிலை

சிறந்த காலநிலை குதுரேமுக்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது குதுரேமுக்

  • சாலை வழியாக
    குதுரேமுக் சுற்றுலாத்தலமானது எல்லா அருகாமை நகரங்களுடனும் கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளால் (KSRTC) நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இவை குறைந்த கட்டணத்தில் நிறைவான சௌகரியமான பயண வசதிகளைக்கொண்டுள்ளன. இது தவிர தனியார் வால்வோ சொகுசுப்பேருந்துகள் மற்று குளிர்சாதன சொகுசு வாகனங்கள் கர்கலா (50 கி.மீ), மங்களூர் (130கி.மீ), பெங்களூர் (350 கி.மீ) போன்ற நகரங்களிலிருந்து குதுரேமுக்கிற்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மங்களூர் ரயில் நிலையம் குதுரேமுக் சுற்றுலாஸ்தலத்துக்கு அருகிலுள்ள ரயில் நிலையமாக விளங்குகிறது. இது குதுரேமுக்கிலிருந்து 110 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. இங்கிருந்து பயணிகள் டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் மூலம் குதுரேமுக் ஸ்தலத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மங்களூர் விமான நிலையம் குதுரேமுக் பகுதிக்கு அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையமாக அமைந்துள்ளது. இது குதுரேமுக்கிலிருந்து சுமார் 130 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் மத்திய கிழக்காசிய நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat