Want to share your reaction with friends?
வெங்கண்ண பாவி கோயில், கர்னூல்
வெங்கண்ண பாவி கோயில் கர்னூல் நகரத்தில் ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக விளங்குகிறது. இருப்பினும் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் இது இன்னும் பிரபலமாகவில்லை.
இந்த கோயில் ஸ்தலத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று இந்த மலையடிவாரத்திலேயே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது சிதிலமடைந்து காணப்படுவதுடன் புதையல் தேடுபவர்களால் தோண்டிப்போடப்பட்டும் காட்சியளிக்கிறது.
இந்த கோயில் ஸ்தலத்தில் பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுவதே இதற்கு காரணம். மேலும், சுற்று மண்டபத்துடன் கூடிய ஒரு தீர்த்தக்குளம் ஒன்றும் இந்த கோயிலுக்கு அருகில் காணப்படுகிறது.
இந்த ஸ்தலத்திலுள்ள மற்றொரு கோயில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. மலையின் உச்சியை நோக்கி மேலே ஏறிச்செல்வது சிரமமான பயணமாக இருக்கும் என்றாலும், உச்சியிலிருந்து காணக்கிடைக்கும் எழிற்காட்சிகள் அந்த சிரமத்தை ஈடு செய்கின்றன. கோயிலைச்சுற்றிலும் காணப்படும் ரம்மியமான இயற்கைகாட்சிகளின் பின்னணியையும் ரசித்து மகிழலாம்.

