Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருக்ஷேத்ரா » ஈர்க்கும் இடங்கள் » பெஹோவா

பெஹோவா, குருக்ஷேத்ரா

50

பெருங்காவியமான மஹாபாரதத்தில் பெஹோவா எனும் இந்த இடம் ‘பிரீத்துதகா’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு பிரீத்து எனும் மன்னர் தனது தந்தையின் ஆத்ம சாந்திக்காக தவம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

எனவே இந்த ஸ்தலம் பெற்றோர்களுக்கும் முன்னோர்களுக்கும் சிரத்தாஞ்சலி சடங்கு செய்ய உகந்த இடமாக கருதப்படுகிறது. தானேசரிலிருந்து 27 கி.மீ தூரத்தில் பெஹோவா அமைந்துள்ளது.

882ம் வருடத்திலிருந்து இந்த இடம் இருந்து வருவதாக சொல்லப்பட்டாலும் தற்போது வரலாற்றுச்சான்றுகள் இதன் தோற்றம் 895 வருடத்தில் நிகழ்ந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

பிரீத்து மன்னரின் தந்தை தனது இறுதி மூச்சை சரஸ்வதி பிரீத்துதக் எனும் இடத்தில் விட விரும்பினார். எனவேதான் இந்த இடத்தில் பிரீத்து மன்னர் தனது தந்தைக்காக பல கடவுளை துதித்து பூஜைகள் செய்து உண்ணாவிரதம் மேற்கொண்டு தியானத்தில் இருந்தார்

பிரீத்து மன்னர் உண்ணாவிரதம் மேற்கொண்ட இடம் பீரீத்துதக் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பல நீராடு துறைகள் மற்ரும் கோயில்கள் இந்த மன்னரின் தியாகச்செயலை ஞாபகப்படுத்தும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் கார்த்திகேயா கோயில் முக்கியமான ஒன்றாகும். புராணக்கதைகளின்படி, உலகை வலம் வருவதற்காக பயணம் மேற்கொண்ட கார்த்திகேயா இந்த இடத்தில் தனது தோலை துறந்ததாக சொல்லப்படுகிறது.

இரண்டு கற்பாறை அடுக்குகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் அமைந்திருக்கும் கார்த்திகேயா சிலையை சுற்றி எப்போதும் தீபங்கள் ஏரிந்துகொண்டே இருக்கின்றன.

மஹாபாரதப்போர் முடிந்தபிறகு, போரில் உயிர் நீத்த 18 லட்சம் பேரின் நினைவாக இங்கு இந்த விளக்குகளை ஏற்றுமாறு பாண்டவர்களில் மூத்த சகோதரரான யுதிஷ்டிரரிடம் கிருஷ்ணர் கூறியுள்ளார்.

இந்த கோயில் கட்டப்பட்ட காலம் குறித்த தகவல் ஏதும் இல்லை என்றாலும், இது 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மஹாபாரத காலத்திலிருந்தே இங்கு வசித்த பல குடும்பங்களின் வரலாற்றுக்குறிப்புகள் பதியப்பட்டு வந்திருக்கிறது. பிற்காலத்தில் இந்த குறிப்புகள் சிலவற்றை வேற்று மத ஆட்சியாளர்கள் அழித்து விட்டதாக கருதப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed