Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஷிநகர் » வானிலை

குஷிநகர் வானிலை

குஷிநகரத்தில் நிலவி வரும் பருவநிலையை கணக்கில் கொள்ளும் போது நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற நாட்களாக உள்ளன. எனினும், முக்கியமான பௌத்த மதத்தலமான குஷிநகரத்தின் புனிதத்தலங்கள், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை வருடம் முழுவதும் கவர்ந்திழுக்கும் இடமாக உள்ளன.

கோடைகாலம்

குஷிநகரத்தில் கோடைக்காலம் மார்ச் முதல் மே மாதங்களில் நிலவி வருகிறது. இந்நாட்களில் குஷிநகரத்தின் வெப்பநிலை 20°C முதல் 40°C வரையிலும் இருக்கிறது. மே மாதம் குசிநகரத்தின் மிகவும் வெப்பமான மாதமாக உள்ளது.

மழைக்காலம்

ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலத்தில், அவ்வப்போது கனமழையைப் பெறும் இடமாக குஷிநகர் உள்ளது. இந்நாட்களில் வானம் மேகமூட்டத்துடனும் மற்றும் ஈரப்பதத்துடனும் காணப்படும்.

குளிர்காலம்

குஷிநகரத்தின் குளிர்காலம் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் நிலவும். இந்நாட்களில் பருவநிலை மிதமாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருப்பதுடன், வெப்பநிலை 12°C முதல் 20°C வரையிலும் மட்டுமே இருக்கும்.