லாட்னூன் நகரிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சலாசர் பாலாஜி அல்லது சலாசர் தாம் ஒரு புகழ்பெற்ற புனித ஸ்தலமாகும். இந்தக் கோயில் பாலாஜி என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் ஹனுமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு சைத்ரா மற்றும் அஷ்வின் ஆகிய இந்து மாதங்களின் பௌர்ணமி தினங்களில் வெகு விமரிசையாக திருவிழா ஒன்று நடைபெறும். அப்போது இந்தக் கோயிலுக்கு நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள்.
மேலும் சக்தி ஸ்தலம் என்றும் அழைக்கப்படும் சலாசர் பாலாஜி கோயிலுக்கு வரும் பக்தர்களும் பயணிகளும் நேரம் இருந்தால் அருகில் இருக்கும் ராணி சதி மற்றும் கதுஷ்யாம்ஜி கோயில்களுக்கும் சென்று வரலாம்.