Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » வானிலை

லக்னோ வானிலை

அக்டோபர்  முதல் மார்ச் வரையிலான பருவமே லக்னோ நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. கோடைக்காலத்தில் கடும் வெப்பமும் வறட்சியும், குளிர்காலத்தில் கடும் குளிர் மற்றும் பனியும் இப்பகுதியில் நிலவுகிறது. கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 45°C  வரை வெப்பநிலை செல்லக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : லக்னோ பகுதியில்  மார்ச் மாதம் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரையில் நீடிக்கின்றது. பொதுவாக கோடைக்காலத்தில் அதிக உஷ்ணமும் வறட்சியும் காணப்படுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 45°C  வரை வெப்பநிலை செல்லக்கூடும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : லக்னோ பகுதியில்  ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம் நிலவுகிறது.  கடுமையான மழைப்பொழிவு காணப்படும் இக்காலத்தில் சூழல் ஈரமாகவும் ஈரப்பதம் அதிகம் நிரம்பியும் காணப்படும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை லக்னோ பகுதியில்  குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் 12°C  முதல் 20°C  வரை வெப்பநிலை காணப்படுகிறது. மேலும் ஜனவரி மாதத்தில் அதிக பனிப்பொழிவும் இருப்பதால் சில சமயம் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதும் ரயில் சேவைகள் தாமதமாவதும் உண்டு.