Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணாலி » வானிலை

மணாலி வானிலை

மணாலி மலைவாசஸ்தலத்துக்கு பயணம் மேற்கொள்ள மார்ச் முதல் ஜுன் வரையான பருவம் ஏற்றதாக உள்ளது. உறைய வைக்கும் குளிரை தவிர்த்து மலையழகின் குளுமையை அனுபவிப்பதற்கு இந்த மாதங்கள் பொருத்தமாக உள்ளன.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : மணாலி பகுதியில் மார்ச் முதல் ஜூன் மாத இறுதி வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 25°C க்கு மேல் உயர்வதில்லை. குறைந்தபட்சமாக 10°C வெப்பநிலை நிலவுகிறது. இக்காலத்தில் காலை நேரத்தில் இதமாக காணப்படும் வெப்பநிலை போகப்போக குறைந்துகொண்டே செல்கிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : மணாலி பகுதியில் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் மணாலிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துவிடுவது நல்லது. மழைக்காலத்தில் குல்லு பகுதியில் நிலச்சரிவுகளும் சாலைப்பாதிப்புகளும் அதிகம் காணப்படும் என்பதால் இது சுற்றுலாவிற்கு உகந்த காலமாக இல்லை.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) : மணாலி சுற்றுலாத்தலத்தில் அக்டோபர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. குளிர்காலத்தில் மணாலி பகுதி கடுமையான குளிருடன் காட்சியளிக்கிறது. கடுமையான பனிப்பொழிவும் காணப்படும் இக்காலத்தில் குறைந்தபட்சமாக -7° C வரை வெப்பநிலை குறைகிறது.