மண்டியிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கொட்லி எனும் இடம் இங்குள்ள ஏராளமான கோயில்களுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. இவற்றில் சிவன் கோயில், ஜனித்ரி கோயில், ஜக்ரு தேவ் கோயில், கம்ராவ்ஹ் தேவ் கோயில், கஸ்லா தேவ் கோயில், ரச்சேரா தேவ் கோயில், மோஹன் தேவ் கோயில், நாகினி தேவி கோயில், துரோகா வாலி தேவி கோயில், சுர்கணி தேவி கோயில் மற்றும் தேஜ் பஹதூர் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மண்டி மாவட்டத்தின் துணை மாவட்டமான இது நாடெங்கிலுமிருந்தும் ஏராளமான ஆன்மீக யாத்ரீகர்களை ஈர்த்து வருகிறது.