ஷிகாரி தேவி கோயில் ஹிந்துக்களுக்கான முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2850மீ உயரத்தில் ஹிமாசல்பிரதேச மாநிலத்திலுள்ள மண்டி மாவட்டத்தில் உள்ளது.
ஒரு கூரையற்ற புராதன கோயிலான இது ஷிகாரி தேவி சிகரத்தில் வீற்றுள்ளது. புராணக்கதையின்படி, இந்த கோயிலுக்கு கூரை அமைக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியடைந்ததாக சொல்லப்படுகிறது.
ஷிகாரி தேவிக்கான இந்த கோயில் ஜஞ்ஜெஹ்லி பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. ஜஞ்ஜெஹ்லியில் உள்ள அடிவார முகாமிலிருந்து மலையேற்றப்பாதை மூலமாகவும் இந்த கோயிலை சென்றடையலாம்.