மண்டி பகுதியில் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் ஒரு அம்சம் இந்த ஷாப்பிங் பொழுதுபோக்கு ஆகும். இங்கு பயணிகள் பாரம்பரிய கைவினைப்பொருட்கள், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் கற்களில் குடையப்பட்ட அழகுப்பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம்.
பாரம்பரிய திபெத்திய பொருட்களை விற்கும் கடைகள் இங்கு ஏராளமாக உள்ளன. ஷீஷாம் மரம் மற்றும் தேவதாரு மரத்தில் செய்யப்பட்ட பஹாரி மர வேலைப்பாடுகள் மற்றும் ஹிந்து தெய்வ உருவங்கள் போன்றவை இங்கு கிடைக்கும் கைவினைப்பொருட்களில் முக்கியமானவையாகும்.
பழங்காலத்தில் திபெத்திய நாட்டுக்கு செல்லுக்கும் நுழைவாயிற்பகுதியாக விளங்கிய இந்த நகரம் பல நூற்றாண்டுகளாக வணிகர்களுக்கான முக்கியத்தலமாக திகழ்ந்து வந்துள்ளது.