Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டி » வானிலை

மண்டி வானிலை

மண்டி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா அம்சங்களை சுற்றிப்பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் மார்ச் முதல் அக்டோபர் வரையிலான பருவத்தில் பயணம் மேற்கொள்வது நல்லது. இருப்பினும் கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்திலும் மண்டிக்கு பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இதமான பருவநிலையே இக்காலத்திலும் நிலவுகிறது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : மண்டி பகுதியில் ஏப்ரல் மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்சமாக 18° C முதல், அதிகபட்சமாக 39.6°C வரை வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : மண்டி பகுதியில் ஜுலை மாதத்தில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீள்கிறது. மழைக்காலத்தில் சுமாரான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரை) : மண்டிபகுதியில் நவம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. ஹிமாசலபிரதேசத்தின் மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது மண்டி மாவட்டத்தில் அவ்வளவு குளிர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் குறைந்தபட்சமாக 6.7° C முதல், அதிகபட்சமாக 26.2°C வரை வெப்பநிலை நிலவுகிறது. இனிமையான சூழல் காணப்பட்டாலும் சூரிய அஸ்தமனத்திற்குபின் வெப்பநிலை வெகுவாக குறைந்து குளிர் அதிகமாக இருக்கும்.