மண்டுவில் உள்ள மிகப் பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக மாலிக் முகிஸ் மசூதி உள்ளது. சாகர் தலாவோ ஏரியைச் சுற்றிலும், 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாக இந்த மசூதி உள்ளது.
இந்த பகுதியைச் சுற்றிலும் இருந்த இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு, அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுமானப் பொருட்களை வைத்து இந்த மசூதி கட்டப்பட்டிருப்பது அதன் ஆர்வமூட்டக்கூடிய சிறப்பம்சமாகும்.
இம்மசூதியின் உள் சுவர் பகுதிகளில் அழகிய மொசைக் டைல்ஸ்களில், இஸ்லாமிய எழுத்துக்கள் காலிகிராபி (அழகிய எழுத்துக் கலை) முறையில் செதுக்கப்பட்டுள்ளன.
மாலிக் முகிஸ் மசூதி சற்றே சிதைந்த நிலையில் காணப்படுவதால், இந்த பகுதியில் அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட ஜாமி மசூதி மற்றும் திலாவர் கான் மசூதி ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, அவற்றின் கட்டிடக்கலையுடன் ஒப்பிடும் வகையில் இந்த மாலிக் மசூதியை கற்பனையில் உருவகப்படுத்தலாம்.
இதன் நுழைவாயிலில் உள்ள மண்டபத்திற்கு குவி மாடங்கள் இல்லாமலிருப்பினும், இது ஒரு அற்புதமான நுழைவாயில் என்று சொல்லாமலிருக்க முடியவில்லை. வரலாற்றின் மீது அதீத ஆர்வமும் மற்றும் இஸ்லாமிய பற்றும் உடைய சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மசூதி மிகவும் விருப்பமான இடமாக இருக்கும்.