இண்டஸ் ஆற்றினால் சூழப்பட்டிருக்கும் இந்த ரிசர்வ் ஃபாரெஸ்ட் சரணாலயம் பயணிகளுக்கு டிரெக்கிங், கேம்பிங் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஏற்றதாக விளங்குவதோடு பிரசித்த பிக்னிக் (சிற்றுலா) ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
பருவநிலை சீராக இருக்கும்போது இந்த வனப்பகுதியிலிருந்து ஜம்மு காஷ்மீரின் பிர் பஞ்சால் மலைகளின் அழகை பார்த்து ரசிக்கலாம்.
இங்கு காட்டு காகங்கள், சிக்கோர், ஹிமாலயக்கழுகு, பார்ட்ரிட்ஜ் குரங்கு, பபூன் குரங்கு, நரி, குரைக்கும் மான் மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள் வசிக்கின்றன.
சிம்லா ரிசர்வ் ஃபாரெஸ்ட் சரணாலயத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த சரணாலயம் பசுமையான இயற்கைச்சூழலின் நடுவே பொழுதுபோக்குவதற்கேற்ற எழில் ஸ்தலமாக விளங்குகிறது. இந்த வனப்பகுதியில் ஓக், பைன், மேப்பிள், செஸ்ட்நட் மற்றும் செடார் மரங்கள் நிறைந்துள்ளன.