Search
  • Follow NativePlanet
Share

மியாவோ  – வடகிழக்கிந்தியாவின் எல்லைப்புற அழகு மற்றும் கலாச்சாரம்!

9

அருணாசலபிரதேச மாநிலத்தின் சங்க்லாங் மாவட்டத்தில் ஒரு உபமண்டலமாக அமைந்திருக்கும் மியாவோ அஸ்ஸாம் மாநில எல்லைப்பகுதியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. வடகிழக்கிந்தியாவில் அதிக மழைப்பொழிவு நிலவும் பிரதேசமாக அறியப்படும் இப்பகுதி அருணாசலபிரதேச மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. நாவோ திஹிங் எனும் ஆறு இப்பகுதியின் வழியே ஓடுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 213 மீ உயரத்தில் இந்த நகர்ப்பகுதி வீற்றிருக்கிறது. பட்காய் பும் எனும் மலைத்தொடர் ஒன்றும் மியாவோ நகரத்தை ஒட்டியே அமைந்துள்ளது. இது இமயமலைகளின் கிழக்குமுனையில் உள்ள நீட்சியாகும்.

உயர்ந்த காடுகளும் குளுமையான பருவநிலையும் மியாவோ நகர்ப்பகுதியை அருணாசலபிரதேச மாநிலத்தில் ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன. தியுன் மற்றும் சௌக்காம் எனும் இரண்டு நகர்ப்பிரிவுகள் மியாவோ பகுதியில் அடங்கியுள்ளன.

மரப்பலகை வியாபாரத்திற்கு புகழ் பெற்றுள்ள சௌக்காம் நகர்ப்பகுதி ஒருகாலத்தில் ஆசியாவிலேயே செல்வம் நிறைந்த நகரமாக திகழ்ந்திருக்கிறது. சிறிய நகர அமைப்பாக இருந்தாலும் மியாவோ நல்ல சாலைப்போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளது.

அமைதியான நகரச்சூழல் மட்டுமல்லாமல் பல்வேறு சுற்றுலா அம்சங்களையும் மியாவோ கொண்டுள்ளது. நம்தம்பா புலிகள் திட்ட வளாகம், விலங்குக்காட்சியகம், அருங்காட்சியகம் போன்ற சுவாரசியமான சுற்றுலா அம்சங்கள் இங்கு அமைந்துள்ளன.

பல்வேறு ஹிந்து கோயில்கள் மற்றும் ரிவைவல் சர்ச், சர்ச் ஆஃப் கிரைஸ்ட் போன்ற கத்தோலிக்க தேவாலயங்கள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.

இவற்றோடு அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப்பள்ளிகள் போன்றவையும் இந்நகரத்தில் அமைந்துள்ளன. பிசி ஜாவுங் என்பவரால் நடத்தப்படும் ‘தி மியா டைம்ஸ்’ எனும் பத்திரிகையும் இங்கிருந்து வெளியாகிறது.

இந்நகர்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அரசாங்க அலுவலகங்களில் பணி புரிகின்றனர். நகரத்தை ஒட்டிய கிராமப்புறங்களில் உள்ளவர்கள் விவசாயத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தேயிலை பயிரிடுதல் இங்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. டாங்சா, சிங்போ மற்றும் லிசு ஆகிய இனப்பிரிவுகளை சேர்ந்தவர்கள் இங்கு அதிகமாக வசிக்கின்றனர். சௌக்காம் நகரத்தின் வடபகுதியில் பெரும்பாலும் முஸ்லிம் இனத்தார் அதிகமாக காணப்படுகின்றனர்.

உலர்ந்த மலைப்பிரதேசம் என்பதால் இங்கு ஒபியம் அதிகமாக பயிராகிறது. டாங்சா, சிங்போ, அஸ்ஸாமி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் இங்கு பரவலாக பேசப்படுகின்றன.

அமைதியான நகரமாக காட்சியளிக்கும் மியோவோ நகரத்தில் மிகவும் குறைவான சுற்றுலா அம்சங்களே நிறைந்துள்ளன. இவற்றில் போர்டும்சா நம்சாய் நம்போங் மற்றும் ஜய்ராம்பூர் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பருவநிலை

மியாவோ நகர்ப்பகுதிக்கு கோடைக்காலத்தில் விஜயம் செய்வதாக இருந்தால் பருத்தி உடைகளுடன் செல்வது சிறந்தது. குளிர்காலத்தில் உல்லன் உடைகளுடன் செல்வதும் அவசியம்.

எப்படி செல்வது மியாவோ நகரத்துக்கு

அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து போக்குவரத்து வசதிகள் குறையின்றி கிடைக்கின்றன. விமானம், ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து மூலமாக மியாவோ பகுதிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளலாம்.

மியாவோ சிறப்பு

மியாவோ வானிலை

சிறந்த காலநிலை மியாவோ

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மியாவோ

  • சாலை வழியாக
    அஸ்ஸாம் மற்றும் அருணாசலபிரதேச மாநில அரசுப் பேருந்துகள் மூலமாக இந்நகரத்திற்கு வரலாம். திப்ருகர் நகரத்திலிருந்து தின்சுகியா, மார்கெரிடா, லெடோ, ஜாகுன் மற்றும் கர்சாங் வழியாக மியாவோ நகரத்துக்கு தினசரி பேருந்து சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தின்சுகியா ரயில் நிலையத்திலிருந்து 115 கி.மீ தூரத்தில் மியாவோ நகரம் உள்ளது. மேலும் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள மார்கெரிட்டா ரயில் நிலையமும் 65 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    திப்ருகர் விமான நிலையம் மற்றும் தின்சுகியா ரயில் நிலையம் ஆகியவை மியாவோ நகருக்கு அருகில் அமைந்துள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat