தற்போது சத்ரபதி சிவாஜி என்று பெயர் மாற்றம் பெற்ற மும்பையின் மத்திய ரயில் நிலையம், முன்னர் விக்டோரியா டெர்மினஸ் (வி.டி ரயில் நிலையம்) என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டு வந்தது.
இந்த ரயில் நிலையத்தின் சுற்றுப்புறப் பகுதிகளிலும், நடைபாதைகளிலும், சுரங்க வழிப்பாதைகளிலும் எண்ணற்ற எலெக்டிரானிக் பொருட்கள், கணினி சந்தைகள், ஆடை வகைகள் போன்றவை இளைஞர்களால் விற்பனை செய்யப்படும் காட்சிகளை நீங்கள் பார்க்கலாம்.
மேலும் இங்கு அஞ்சல் தலைகள் மற்றும் தொன்மையான நாணயங்கள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்களை விற்கும் கடைகளும் கணிசமான அளவில் இருக்கின்றன.