Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மூணார் » வானிலை

மூணார் வானிலை

மிதமான பருவநிலையை கொண்டுள்ள மூணார் சுற்றுலாப்பிரதேசம் ஆண்டு முழுவதுமே பயணிகளை வரவேற்கிறது. பொதுவாக கோடைக்காலம் வெளிச்சுற்றுலாவுக்கும், குளிர்காலம் அதிசாகச பொழுதுபோக்குகளுக்கும் ஏற்றவை. அதிக மழைப்பொழிவை கொண்ட மழைக்காலம் தவிர்க்கபடவேண்டிய ஒன்றாகும்.

கோடைகாலம்

மூணார் சுற்றுலாப்பிரதேசத்தில் கோடைக்காலமானது மிதமான வெப்பம் மற்றும் இனிமையான சூழலைக் கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் 19° C முதல் 35° C வரை வெப்பநிலை நிலவுகிறது. இரவில் வெப்பநிலை மேலும் குறையவும் வாய்ப்புள்ளது. பொதுவாக இந்த கோடைக்காலமே இப்பகுதிக்கு விஜயம் செய்து தேயிலைத்தோட்டங்கள் போன்ற அம்சங்களுக்கு விஜயம் செய்து ரசிக்க ஏற்றதாக உள்ளது.

மழைக்காலம்

அடர்ந்த வனப்பகுதியை கொண்டிருப்பதால் மூணார் சுற்றுலாப்பிரதேசம் மழைக்காலத்தில் கடும் மழையை பெறுகிறது. ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம் நீடிக்கிறது. ஒட்டுமொத்த தாவரப்பசுமையும் நீரில் நனைந்து குளித்துக்கொண்டிருக்கும் காட்சி மிக அற்புதமான ஒன்று என்றாலும் இக்காலத்தில் வெளிச்சுற்றுலா மிக அசௌகரியமாக இருக்கும் என்பதால் இக்காலத்தில் மூணார் பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

மூணார் சுற்றுலாப்பிரதேசத்தில் டிசம்பரில் துவங்கி பிப்ரவரி முதல் வாரம் வரை குளிர்காலம் நிலவுகிறது. அதிகக் குளுமையுடன் காணப்படும் குளிர்காலத்தில் வெப்பநிலை 10° C வரை குறைந்து காணப்படுகிறது. மலையேற்றம், சிகரம் ஏறுதல் போன்றவற்றுக்கு இப்பருவம் மிக உகந்ததாக உள்ளது. பயணிகள் குளிர்கால உடைகளை மறக்காமல் கொண்டு செல்வதும் அவசியம்.