Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முருதேஸ்வர் » வானிலை

முருதேஸ்வர் வானிலை

முருதேஸ்வர் நகருக்கு ஆண்டின் எந்த காலங்களிலும் சுற்றுலா வரலாம். எனினும் அக்டோபர் மற்று மே மாதங்களின் இடைப்பட்ட காலங்கள் முருதேஸ்வரை சுற்றிப் பார்க்க சிறந்த காலங்களாகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : முருதேஸ்வரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 35 டிகிரியும் , குறைந்தபட்சமாக 20 டிகிரியுமாக வெப்ப நிலை நிலவும். இந்தக் காலங்களில் நிலவும் அதிவெப்பமான வானிலை முருதேஸ்வரை சுற்றிப் பார்க்க கடினமாக இருக்கும். எனவே இந்தக் காலங்களில் முருதேஸ்வர் வருவதை பயணிகள் தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : முருதேஸ்வரின் மழைக் காலங்களில் அதிகமாக மழைப் பொழிவு இருக்கும் காரணத்தால் பயணிகள் பெரும்பாலும் இந்தக் காலங்களில் முருதேஸ்வருக்கு வருவதில்லை.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : முருதேஸ்வரின் பனிக் கால வெப்பநிலை அதிகபட்சம் 28 டிகிரியும், குறைந்தபட்சம் 14 டிகிரியுமாக இருக்கும். இந்தக் காலங்களில் நிலவும் இதமான வெப்பநிலை காரணமாக முருதேஸ்வரில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.