Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» முஜாஃபர்நகர்

முஜாஃபர்நகர் - மகாபாரதத்தின் சுவடுகள் சுமக்கும் நகரம்!

23

உத்தரபிரதேசத்தின் முஜாஃபர்நகர் அதன் கோவில்களுக்கும் மற்ற மத ஸ்தலங்களுக்கும் புகழ்பெற்று விளங்குகிறது. முகாலயர்களின் காலத்தில் சயீத் ஜகிர்தார் என்பவரால் உருவாக்கப்பட்டு அவரது தந்தையின் பெயரான முஜாஃபர் அலி கான் என்பதன் நினைவாக முஜாஃபர்நகர் என சூட்டப்பட்டது.  டெல்லி-டெஹ்ராடூன் நெடுஞ்சாலையில் இருக்கும் இந்நகரம் நொய்டாவிற்கு அருகில் இருக்கும் வேகமாக வளர்ச்சியடையும் நகரமாகும்.

வரலாறு

ஹரப்பா நாகரீகத்தின் காலம் வரை இந்த நகரத்தின் வரலாறு பழமையானது. மகாபாரத போர் இங்கிருக்கும் கிராமமான 'பசேந்தா'வில் நடந்ததாகவும், இருதரப்பு படைகளும் இப்போது 'கெளராவாலி' என்றும் 'பாண்டாவலி'  என்றும் அழைக்கப்படும் இடங்களில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது மகாபாரத்தின் முக்கியமான நகரமான குருஷேத்ரா மற்றும் அஸ்தினாபுரம் நகரங்களுக்கு அருகிலேயே முஜாஃபர்நகர் அமைந்துள்ளது. பின் முகாலயர் காலத்தில் சயீத் ஜகிர்தார் இவ்வூரை மீண்டும் நிர்மாணித்து பெயர் சூட்டியதால் எழுச்சி பெற்றது.

முஜாஃபர்நகர் நொய்டா மற்றும் மீரத் நகரங்களுடன் தொழில்வளர்ச்சியில் போட்டி போட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் அங்கிருக்கும் பைரோ கோவில் விழா காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.

முஜாஃபர்நகரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தங்கள்

நகரத்தின் முக்கியமான சுற்றுலா தளமாக பைரோ கோவில் விளங்குகிறது. பக்தர்கள் இங்கிருக்கும் மற்ற கோவில்களான கணேஷ்தம், துர்கா தம், அனுமார் தம் மற்றும் காளீ-நாடி மந்திர் ஆகிவற்றுக்கும் செல்கின்றனர்.

ஷிவ் செளக் என்னுமிடத்தில் இன்னும் பல புகழ்பெற்ற கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு இந்துக்களால் புனிதமானதாக கருதப்படும் பழங்கால மரமான அக்ஷய வட் வ்ரிக்ஷ் அமைந்துள்ளது.

தர்கா ஹர் ஶ்ரீநாத் என்ற புகழ்பெற்ற சூஃபி ஞானியின் கல்லறையும் இங்கு உள்ளது. தினமும் கீர்த்தனைகள் பாடப்படும் சங்கீர்தான் பவன் இங்கு அமைந்துள்ளது,

வஹேல்னா என்ற இயற்கை சூழ்நிலை நிறைந்த கிராமம் முஜாஃபர்நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு 1008 பர்ஷ்வநாத் திகம்பர ஜெயின் அதிஷ்யே சேத்ரா என்ற வஹெல்னா ஜெயின் கோவில் அமைந்துள்ளது. வட இந்தியாவில் இருக்கும் முக்கியமான வரலாற்று, யாத்ரீக ஸ்தலமாகும்.

மத ஸ்தலங்கள் மட்டுமல்லாது முஜாஃபர்நகரில் பல அருங்காட்சியகங்கள், கல்வி நிலையங்கள், உயிரியல் காட்சியகங்கள், அரசு கல்வி காட்சியகங்கள் ஆகியவையும் அமைந்துள்ளன. நகரத்தின் பரபரப்புகளுக்கு இடையே கம்லா நேரு வாடிகா போன்ற அமைதி தவழும் இடங்களும் இங்கு உண்டு.

பாம்பினால் கடிக்கப்பட்டு இறக்கப்போகும் 7 நாட்களுக்கு முன்பு ஷுகா ரிஷி என்பவரால் பரிக்ஷாத் மஹாராஜ் என்பவருக்கு பகவத் கீதை போதிக்கப்பட்ட இடம் ஷுக்ரதால் என்றழைக்கப்படுகிறது. பக்தர்கள் அந்த இடத்தையும் காணலாம்.  

முஜாஃபர்நகர் வானிலை

முஜாஃபர்நகரில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை மிதமான வானிலை நிலவுவதால் அக்காலத்தில் பயணப்படுவதே சிறந்ததாகக் கருதப்படுகிறது. எனினிம் இங்குள்ள மதஸ்தலங்களை பார்வையிட மக்கள் வருடம் முழுதும் வருகை தருகிறார்கள்.

முஜாஃபூர்நகருக்கு பயணிக்கும் வழிகள்

முஜாஃபர்நகரை விமான, ரயில் மற்றும் சாலை வழியாக அடையலாம்.

முஜாஃபர்நகர் சிறப்பு

முஜாஃபர்நகர் வானிலை

சிறந்த காலநிலை முஜாஃபர்நகர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது முஜாஃபர்நகர்

  • சாலை வழியாக
    டெல்லி-டெஹ்ராடூன் நெடுஞ்சாலையில் உள்ள முஜாஃபர்நகரில் இருந்து அலகாபாத், மீரத், ஹரித்வார், உஜ்ஜெய்ன், டெல்லி ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    டெல்லி, ஜலந்தர், அம்ரிஸ்டர், அலகாபாத், டெஹ்ராடூன், ஹரித்வார் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இருந்து முஜாஃபர் ரயில் நிலையத்திற்கு தொடர் ரயில் வசதி உண்டு.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    டெஹ்ராடூனின் ஜாலி விமானநிலையமே முஜாஃபர்நகருக்கு அருகாமையில் உள்ள விமானநிலையமாகும். அங்கிருந்து பேருந்து, கார்கள் மூலம் முஜாஃபர்நகரை அடையலாம். டெல்லி செல்லும் அனைந்த்து பேருந்துகளும் முஜாஃபர் நகரை கடந்தே செல்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun