Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மைசூர் » வானிலை

மைசூர் வானிலை

செப்டம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் பருவ நிலை இதமானதாக இருப்பதால் இக்காலத்தில் மைசூருக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளலாம்.

கோடைகாலம்

(மார்ச் – மே): கோடைக்காலத்தில் மைசூர் நகரம் மிகுந்த உஷ்ணத்துடனும் அசௌகரியமாகவும் மாறுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 39° C ஆகவும் அதே சமயம் இரவு வெப்பநிலை 20° C என்ற அளவில் குறைந்தும் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கோடைக்காலத்தில் மைசூருக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் – செப்டம்பர்): சில சமயங்களில் மைசூர் அதிக மழிப்பொழிவை பெறுகிறது, சில சமயம் மழைக்காலத்தில் மிதமான மழைப்பொழிவே காணப்படும்.

குளிர்காலம்

(நவம்பர் – பிப்ரவரி): குளிர் காலத்தில் மைசூர் நகரின் பருவ நிலை மிக விரும்பத் தக்கதாக இனிமையாக விளங்குகிறது. குளிர்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 31° C ஆக காணப்படுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 16° C இருக்கும்.  குளிர்காலத்தில் ஜனவரி மாதம் ரொம்ப குளிராக இல்லாமல் மிதமாக இருப்பதால் இம்மாதத்தில் மைசூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது உகந்தது.