Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகௌர் » வானிலை

நாகௌர் வானிலை

அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான குளிர்காலப்பருவமே நாகௌர் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இப்பருவத்தில் இதமான சூழலுடன் இப்பகுதி காட்சியளிக்கிறது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜுன் வரை): நாகௌர் பிரதேசத்தில் மார்ச் மாதத்தில் துவங்கி ஜூன் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. வறட்சி நிலவும் இந்த கோடைக்காலத்தில் குறைந்தபட்சம் 35° C முதல் அதிகபட்சமாக 47° C வரை வெப்பநிலை நிலவுகிறது. மே மாதத்தில் மிகக்கடுமையான வெப்பமும் காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை): ஜுலை மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நாகௌர் பிரதேசத்தில் மழைக்காலம் நீடிக்கிறது. தொடர்ச்சியற்ற, குறிப்பிட்டுச் சொல்லமுடியாத மழையையே நாகௌர் பிரதேசம் பெறுகிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): நாகௌர் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கின்றது. மிதமான பருவநிலை நிலவும் இக்காலத்தில் சராசரி வெப்பநிலை அதிகபட்சம் 28° C முதல் குறைந்தபட்சம் 5° C வரை நிலவுகிறது.