Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாக்பூர் » வானிலை

நாக்பூர் வானிலை

வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் இவை இரண்டிலிருந்தும் தூரத்தில் அமைந்துள்ளதால் வறண்ட பிரதேச பருவ நிலையை நாக்பூர் பகுதி பெற்றிருக்கிறது. மேலும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் உட்பகுதியில் அமைந்துள்ளதால் மிக வறண்ட சீதோஷ்ண நிலையே எப்போதும் நாக்பூர் பகுதியில் நிலவுகிறது. குளிர்காலம் மட்டுமே நாக்பூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிப் பார்க்க சிறந்தது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் நாக்பூர் நகரத்தில் வெப்பம் கடுமையாக காணப்படும். மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை இங்கு வெப்ப நிலை மிகக்கடுமையான 49°C ஆக உள்ளது. குறிப்பாக மே மாதம் கடும் வெப்பம் நிலவுவதால் அக்காலத்தில் நாக்பூர் பகுதிக்கு பயணம் செய்வது கண்டிப்பாக சிறந்ததல்ல.

மழைக்காலம்

கோடைக்காலத்தை அடுத்து வரும் மழைக்காலம் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கின்றது. மிதமானது முதல் கடுமையானது வரையிலான மழைப்பொழிவை அச்சமயம் இப்பகுதி பெறுகிறது.

குளிர்காலம்

நவம்பர் மாதம் தொடங்க்கி ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நிலவுகிறது. அச்சமயம் குறைந்த வெப்பநிலையாக 10°C காணப்படுவதால் பருவ நிலை மிக இதமாகவும் குளுமையாகவும் இருக்கும். ஆகவே குளிர்காலத்தில் நாக்பூர் பகுதியில் பயணம் செய்வது சிறந்தது.