கேவ்ஸ் கார்டன் அல்லது ஈகோ கேவ் கார்டன் என்று அழைக்கப்படும் இது நைனித்தால் நகரின் பிரசித்தமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடா வாழ்க்கை முறை குறித்த அறிமுகத்தை இது பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.
பெட்ரோமாக்ஸ் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ள 6 தரையடி குகைகள் இந்த வளாகத்தில் அடங்கியுள்ளன. இவை டைகர் கேவ், பாந்தர் கேவ், பேட்ஸ் கேவ், ஸ்க்விரல் கேவ், ஃப்ளையிங் ஃபாக்ஸ் கேவ் மற்றும் ஏப்ஸ் கேவ் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
இந்த குகைகளை இணைக்கும் பாதையானது சில இடங்களில் பயணிகளை தவழ்ந்து செல்ல வைக்கும் அளவுக்கு மிக குறுகலாக காணப்படுகிறது. இயற்கையாக உருவாகியுள்ள இக்குகைகள் உள்ளூர் நிர்வாக அமைப்பின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.