Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நந்திக் குன்று » வானிலை

நந்திக் குன்று வானிலை

நந்திக் குன்றுக்கு மழைக் காலத்தை தவிர எந்த காலங்களிலும் சுற்றுலா வரலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : நந்திக்குன்றின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 29 டிகிரியும், குறைந்தபட்சமாக 23 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும். இந்த காலங்களின் குளிர்ச்சியான வெப்பநிலைக்காக பெரும்பாலான பயணிகள்,  நந்திக்குன்றுக்கு அதன்  கோடை காலங்களில் சுற்றுலா வருவதையே விரும்புவர்.

மழைக்காலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) : நந்திக் குன்றின் மழைக் காலங்களில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக ஒழுங்கற்ற மழைப்போழிவே காணப்படும். எனவே வெளிப்புற பொழுதுபோக்குகளில் ஈடுபட முடியாத இந்த மழைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாகவே இருக்கும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : நந்திக் குன்றின் பனிக் காலங்களில் குறைந்த அளவாக 11 டிகிரியும், அதிகமாக 21 டிகிரியுமாக வெப்ப நிலை பதிவாகும். இந்த காலங்களில் குளிர்ச்சியின் இதமான ஸ்பரிசத்தை பயணிகள் அனுபவிப்பதோடு, நந்திக் குன்றை அதன் பனிக் காலத்தில் சுற்றிப் பார்த்த அனுபவத்தையும் மறக்கமாட்டார்கள்.