Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நஞ்சன்கூடு » வானிலை

நஞ்சன்கூடு வானிலை

குளிர் காலத்தில் பருவ நிலை இதமானதாகவும் உகந்ததாகவும் இருப்பதால் இக்காலத்தில் நஞ்சன்கூடு நகருக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளலாம்.

கோடைகாலம்

(மார்ச் – மே): கோடைக்காலத்தில் நஞ்சன்கூடு நகரம்  மிகுந்த உஷ்ணத்துடனும் ஈரப்பதத்துடனும் அசௌகரியமாக உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40° C ஆகவும் அதே சமயம் இரவு வெப்பநிலை 32° C என்ற அளவில் குறைந்தும் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கோடைக்காலத்தில் நஞ்சன்கூடுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கின்றனர். 

மழைக்காலம்

(ஜூன் – அக்டோபர்): மழைக்காலம் நஞ்சன்கூடு நகருக்கு குளுமையை கொண்டு வருகிறது. பருவநிலை இதமாகவும் இனிமையாகவும் இருப்பதால் பயணிகள் இக்காலத்தில் நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்வதை விரும்புகின்றனர்.

குளிர்காலம்

(நவம்பர் – பிப்ரவரி): குளிர் காலத்தில் நஞ்சன்கூடு நகரின் பருவ நிலை மிக விரும்பத் தக்கதாக இனிமையாக விளங்குகிறது. குளிர்காலத்தில் வெப்பநிலை 22° C முதல் 32° C வரை காணப்படுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக இருக்கும்.  குளுமையும் இனிமையும் நிறைந்த இக்காலத்தில் பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.