குணாவா எனும் இந்த சிறிய கிராமம் பீகார் மாநிலத்தின் வடபகுதியில் நவாதா மாவட்டத்தில் உள்ளது. இந்த இடம் ஜைன மதத்தார் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இங்கு ஸ்ரீ திகம்பர் ஜெயின் சித்த ஷிரேட்ட குணாவாஜி அவர்களுக்கான கோயில் உள்ளது. இந்த கோயில் ஒரு ஏரியின் மையத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கோயில் வளாகத்தில் 40 சிறு கோயில் இடம் பெற்றிருப்பது ஒரு ஆச்சரியமான அம்சமாகும். ஏராளமான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த கோயிலை தேடி வந்து விஜயம் செய்கின்றனர்.
இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த ஜெயின் கோயில்களில் ஒன்றாக இந்த குணாவா ஜெயின் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. இதே குணாவா கிராமம் கனதாரா இந்திரபூதி கௌதம் எனும் யோகி ‘கேவலா ஞானம்’ எனும் ஆத்மீக ஞானோதயத்தை பெற்ற இடமாகவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வோடு தொடர்வுடைய கோயில் ஒன்றும் குனியாஜி ஷீ கௌதம் ஸ்வாமி மந்திர் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. மேற்சொன்ன இரண்டுமே இந்த ஊரின் முக்கிய வழிபாட்டுத்தலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.