Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நிஜாமாபாத் » வானிலை

நிஜாமாபாத் வானிலை

நிஜாமாபாத் நகரத்துக்கு பயணம் மேற்கொள்ள குளிர்காலமே ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் மிதமான, இனிமையான சூழல் மற்றும் வெளிச்சுற்றுலாவுக்கேற்ற குளுமை போன்றவை காணப்படுகின்றன. குறிப்பாக அக்டோபர் முதல் பிப்ரவரி வரை உள்ள இடைப்பட்ட மாதங்கள் நிஜாமாபாத் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றவையாக விளங்குகின்றன. இரவில் உயர்ந்து காணப்படும் குளிரை சமாளிக்க மெல்லிய குளிர் ஆடைகளை கொண்டு செல்வதும் சிறந்தது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் மிகக்கடுமையான, தாங்கிக்கொள்ளமுடியாத வெப்பம், வறட்சி மற்றும் ஈரப்பதத்துடன் நிஜாமாபாத் நகரம் காட்சியளிக்கிறது. பிப்ரவரி மாதத்தில் துவங்கி ஜூன் மாத இறுதி வரை நிஜாமாபாத் பகுதியில் கோடைக்காலம் நிலவுகிறது. குறிப்பாக மே மற்றும் ஜுன் மாதத்தில் இங்கு உஷ்ணம் மிக அதிகமாக இருக்கும். இம்மாதங்களில் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 45° C வரையிலும் உயர்ந்து காணப்படும். எனவே இம்மாதங்களை சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக தவிர்த்து விடுவது நல்லது.

மழைக்காலம்

ஜூன் மாத இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை நிஜாமாபாத் நகரத்தில் மழைக்காலம் நீடிக்கின்றது. பொதுவாக மழைக்காலத்தில் மிதமான மழையை பெறுவதுடன் இப்பகுதியின் வெப்பநிலையும் சராசரியாக 35° C என்ற அளவில் குறைந்துவிடுகிறது. இருப்பினும் உஷ்ணத்தின் ஆதிக்கம் அதிகம் குறையாததுடன் ஈரப்பதமும் அதிகமாகவே காணப்படும்.

குளிர்காலம்

நிஜாமாபாத் பகுதியின் குளிர்காலம் வடஇந்தியப்பகுதிகளின் இயல்பிலிருந்து மிகவும் வேறுபட்டு காட்சியளிக்கிறது. இங்கு நவம்பர் மாதம் துவங்கும் குளிர்காலமானது பிப்ரவரி மாதம் வரை நிலவுகிறது. இவற்றில் குறிப்பாக ஜனவரி மாதம் அதிகக் குளுமையுடன் காணப்படுகிறது. சராசரியாக குளிர்காலத்தின் வெப்பநிலை 27° C முதல் 32° C என்ற அளவில் காணப்படுகிறது.