Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» நூப்ரா பள்ளத்தாக்கு

நூப்ரா பள்ளத்தாக்கு - லடாக்கின் பழத்தோட்டம்!

31

கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் அமைந்துள்ள நூப்ரா பள்ளத்தாக்கு, உண்மையில் 'பூக்களின் பள்ளத்தாக்கு' என்று பொருள்படும் 'ல்டும்ரா' என்று அழைக்கப்படும் பெயரையுடைய இடமாகும்.

கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பூக்களின் அணிவகுப்பைக் காண முடியும். கி.பி.7-ம் நூற்றாண்டில் தொடங்கும் இந்த பகுதியின் வரலாற்றில் சீனர்கள், மங்கோலியர்கள் மற்றும் அரேபியர்களின் படையயெடுப்புகளும் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமிற்கு முன்னதாக பௌத்த மதம் கோலோச்சி வந்த இடமாக நூப்ரா இருந்துள்ளது.

நூப்ரா பள்ளத்தாக்கை அடையும் வழியில் உலகத்திலேயே உயரமான இடத்திலிருக்கும் கார்டுங் லா கணவாயை, லே-யில் இருந்து கடக்க வேண்டும். கார்டுங் லா கணவாய் வருடம் முழுவதுமே பனி படர்ந்து கிடக்கும் இடமாகும்.

இந்த கணவாய் பாதையை பராமரிக்கும் பணியை எல்லைப்புற சாலைகள் நிறுவனம் செய்து வருகிறது. நூப்ரா பள்ளத்தாக்கின் முக்கியமான பார்வையிடங்களாக பனாமிக் கிராமம், என்ஸா மடாலயம் மற்றும் டிஸ்கிட் மடாலயம் ஆகியவை உள்ளன.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 10442 அடி உயரத்தில் உள்ள பனாமிக் கிராமம், அதன் எல்லையிலுள்ள வெந்நீரூற்றிற்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். என்ஸா கோம்பா என்று அழைக்கப்படும் என்ஸா மடாலயமும் இந்த கிராமத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.

350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பௌத்த மடாலயமான டிஸ்கிட் மடாலயம், மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய மடாலயங்களில் ஒன்றாக உள்ள முக்கியமான சுற்றுலா தலமாகும்.

நூப்ரா பள்த்தாக்கினை சுற்றிப் பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள் இவ்விடத்தை விமானம் மற்றும் இரயில் பயணம் மூலம் அடைந்து விட முடியும். நூப்ராவிற்கு அருகிலுள்ள விமான நிலையமாக லே விமான நிலையமும், அருகிலுள்ள இரயில் நிலையமாக ஜம்மு இரயில் நிலையமும் உள்ளது.

வருடம் முழுவதும் நல்ல பருவநிலையை கொண்டிருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் ஜுலை முதல் செப்டம்பர் மாதங்களில் நூப்ரா பள்ளத்தாக்கிற்கு வருவது நல்ல அனுபவத்தை தரும்.

நூப்ரா பள்ளத்தாக்கு சிறப்பு

நூப்ரா பள்ளத்தாக்கு வானிலை

சிறந்த காலநிலை நூப்ரா பள்ளத்தாக்கு

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நூப்ரா பள்ளத்தாக்கு

  • சாலை வழியாக
    ஜம்முவில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் முதலில் லே-விற்கு சென்று, அங்கிருந்து நூப்ரா பள்ளத்தாக்கு செல்லும் பேருந்துகளில் பயணிக்கின்றனர். மேலும், உள்ளூரில் இயக்கப்படும் ஜீப் சர்வீஸையும் நூப்ரா பள்ளத்தாக்கிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய கார்களில் நூப்ரா பள்ளத்தாக்கிற்கு செல்லலாம் என்றாலும், கூர்மையான வளைவுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.நவம்பர் முதல் மே மாதங்களில் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் நூப்ரா பள்ளத்தாக்கிற்கு செல்ல செவ்வாய் கிழமைகள், வியாழக் கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமதி வழங்கப்படும். எனவே, புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் திரும்பி விட முடியும். நூப்ரா பள்ளத்தாக்கு செல்லும் சாலைகள் திங்கள் கிழமைகளில் பராமரிப்பிற்காக மூடப்பட்டிருக்கும். காலை 10 மணி முதல் உள்ளே செல்வதற்காக திறக்கப்படும் இந்த சாலையில், மாலை 1 மணி முதல் 6 மணி வரை மட்டுமே திரும்பி வருவதற்காக திறக்கப்பட்டிருக்கும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    5 கிமீ தொலைவிலிருக்கும் ஜம்மு தாவி இரயில் நிலையம், நூப்ரா பள்ளத்தாக்கிற்கு மிகவும் அருகிலிருக்கும் இரயில் நியைமாகும். ஜம்மு தாவி இரயில் நிலையம் நாட்டின் பிற முக்கிய பகுதிகளுடனும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஜம்மு தாவி இரயில் நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பேருந்துகள் மற்றும் வாடகை கார்களைப் பயன்படுத்தி நூப்ரா பள்ளத்தாக்கை அடைந்திட முடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சுமார் 701 கிமீ தொலைவில் இருக்கும் லே விமான நிலையம் தான் நூப்ரா பள்ளத்தாக்கிற்கு மிகவும் அருகில் உள்ள விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் இந்தியாவின் அனைத்து முக்கியமான விமான நிலையங்களுடனும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, சுற்றுலாப் பயணிகள் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளை அமர்த்திக் கொண்டு நூப்ரா பள்ளத்தாக்கிற்கு செல்ல முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat

Near by City