Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நூப்ரா பள்ளத்தாக்கு » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஜம்முவில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் முதலில் லே-விற்கு சென்று, அங்கிருந்து நூப்ரா பள்ளத்தாக்கு செல்லும் பேருந்துகளில் பயணிக்கின்றனர். மேலும், உள்ளூரில் இயக்கப்படும் ஜீப் சர்வீஸையும் நூப்ரா பள்ளத்தாக்கிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய கார்களில் நூப்ரா பள்ளத்தாக்கிற்கு செல்லலாம் என்றாலும், கூர்மையான வளைவுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.நவம்பர் முதல் மே மாதங்களில் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் நூப்ரா பள்ளத்தாக்கிற்கு செல்ல செவ்வாய் கிழமைகள், வியாழக் கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமதி வழங்கப்படும். எனவே, புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் திரும்பி விட முடியும். நூப்ரா பள்ளத்தாக்கு செல்லும் சாலைகள் திங்கள் கிழமைகளில் பராமரிப்பிற்காக மூடப்பட்டிருக்கும். காலை 10 மணி முதல் உள்ளே செல்வதற்காக திறக்கப்படும் இந்த சாலையில், மாலை 1 மணி முதல் 6 மணி வரை மட்டுமே திரும்பி வருவதற்காக திறக்கப்பட்டிருக்கும்.