Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாட்னா » வானிலை

பாட்னா வானிலை

பாட்னாவில் விடுமுறையைக் கழிக்க விரும்புவோர் கடுமையான கோடைகாலத்தின் வெப்பநிலை தணிந்திருக்கக்கூடியதான அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தை தேர்ந்தெடுப்பது நலம்.

கோடைகாலம்

பாட்னாவில் கோடைகாலம் மார்ச் மாதம் ஆரம்பித்து ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கிறது. இக்காலகட்டத்தின் போது, புழுக்கம் அதிகமாக இருக்கும், அதனால் இந்த சமயத்தில் பாட்னா செல்வது உசிதமல்ல என்று அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தின் போது வெப்பநிலை சுமார் 46 டிகிரி வரை செல்லக்கூடும்.

மழைக்காலம்

பாட்னாவில் மழைக்காலம் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து செப்டம்பர் மாத கடைசி வரை நீடிக்கும். இக்காலத்தின் போது இந்நகரம் அபரிமிதமான மழையைப் பெறக்கூடும்; அதனால் நகரின் சுற்றுலாத் தலங்களுக்கு பிரயாணிப்பது மிகக் கடினமாக இருக்கும்.

குளிர்காலம்

கடும் மழைப்பொழிவுக்குப் பின், அக்டோபர் மாதத்தில் குளிர்காலம் தொடங்கும். இக்காலம் நவம்பர் மாதத்தில் உச்ச நிலையை எட்டி, பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கும். இதுவே இங்கு செல்வதற்கு உகந்த காலகட்டம் ஆகும்.