Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாட்னிடாப் » வானிலை

பாட்னிடாப் வானிலை

வருடம் முழுவதுமே சுற்றுலா செல்ல ஏற்ற அற்புதமான மலை வாழிடம் தான் பாட்னிடாப். எனினும், சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் மே, ஜுன் மாதங்களிலோ அல்லது மழைக்காலத்தில் ஜுலை முதல் செப்டம்பர் மாதங்களிலோ வருவது மிகவும நல்ல அனுபவத்ததை கொடுக்கும். சாகசத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் பாட்னிடாப்பிற்கு டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில் வருவது நல்லது.

கோடைகாலம்

மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் முடிய உள்ள கோடைக்காலத்தில் மகிழ்ச்சிகரமான சூழலை கொண்டிருக்கும் பாட்னிடாப்பில் குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி ஆகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும், இந்நாட்களில் காணப்படும் சராசரி வெப்பநிலை 18 டிகிரி முதல் 20 டிகிரி  வரை மட்டுமே! எனவே தான், கோடைக்காலம் நிலைவும் மே, ஜுன் மாதங்கள் பாட்னிடாப்பை சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்ற மாதங்களாக உள்ளன.

மழைக்காலம்

ஜுலை முதல் அக்டோபர் வரையிலான மழைக் காலத்தில் பாட்னிடாப்பின் மழைப்பொழிவு மிதமானதாக மட்டுமே இருக்கும். ஜுலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் ஆகிய மழைக்கால மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகள் இங்கு சுற்றுலா வரலாம்.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் மிகவும் குளிரான மற்றும் பனிப்பொழிவு மிக்க குளிர் காலத்தை எதிர்கொள்ளும் பாட்னிடாப்பில் சராசரி வெப்பநிலை 0 டிகிரி முதல் 10 டிகிரி  வரையிலேயே இருக்கும். இந்நாட்களில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபட  முடியும்.