பவுரி நகருக்கு 2 கிமீ தொலைவில் கொண்டோலியா ஆலயம் அமைந்திருக்கிறது. பவுரி நகரின் பூமி தேவதையான கொண்டோலியா தேவதைக்கு இந்த ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆலயத்திலிருந்து இமயமலையின் பனிச் சிகரங்களையும், கங்வார்சியுன் பள்ளத்தாக்கின் இயற்கை அழகையும் பார்த்து ரசிக்கலாம். கொண்டோலியாவிலிருந்து புவாக்கல்லிற்கு 4 கிமீ தூரம் பைன் மற்றும் ஓக் மரங்களின் வழியாக பனிச்சறுக்கு செய்து வந்தால் அது ஒரு புதிய அனுபவத்தைத் தரும். மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.