Search
  • Follow NativePlanet
Share

பெரன் - கறைபடாத கானகங்களின் நிலம்!

10

இந்தியாவின் மிகவும் கவர்ச்சியான மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் நாகாலாந்தில் நீங்கள் கறைபடாத மற்றும் காலடி படாத கானகங்களை காணும் இடமாக உள்ள இடம் பெரன் மாவட்டமாகும். மத ரீதியில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும் இந்த கானகத்தை இங்கு வசித்து வரும் மக்கள் பாதுகாத்து வருவதால், இந்த கானகங்கள் நாகாலாந்தின் மிகப்பெரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளன.

இந்த மாவட்டத்தைச் சுற்றிலும் அஸ்ஸாம் மற்றும் மேற்கில் திமாபூர் மாவட்டமும், கிழக்கில் கோஹிமா மாவட்டமும் மற்றும் தெற்கில் மணிப்பூரும் உள்ளன. மாவட்டத் தலைநகரமாக இருக்கும் பெரன் நகரம், இயற்கையை விரும்புபவர்களின் சொர்க்கமாக விளங்குகிறது.

மலையுச்சியில் அமைந்திருக்கும் இந்த நகரம், அருகிலுள்ள அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களை பறவைகளின் காட்சியாக காட்டும் வசதியுள்ள இடமாகும்.

பெரனின் இயற்கையழகு, சுற்றுலாப் பயணிகளின் கொடை!

பேரய்ல் மலைத்தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் பெரன் மாவட்டம் இயற்கையன்னையின் தனிப்பெரும் கருணை பெற்ற இடமாகும். இந்த மாவட்டத்தில் அடர்த்தியான தாவரங்கள் மற்றும் ஆர்ப்பரிக்கும் ஆறுகள் மற்றும் வித்தியாசமான விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றை உங்களால் காண முடியும்.

இந்த வளமான தாவரங்களால் இப்பகுதி மித வெப்ப மண்டலத்துடன் கலந்த வகையான காடுகளை கொண்டிருக்கிறது. கரும்பு மற்றும் மூங்கில் தாவரங்களை பெருமளவு கொண்டிருக்கும் இந்த காடுகளில், பைன், யூகலிப்டஸ் மற்றும் பல்வேறு வகையான காட்டு ஆர்கிட் பூக்களையும் காண முடிகிறது.

கனிம வளம் நிரம்பிய மாவட்டமாக இருக்கும் இந்த மாவட்டம், இந்த காரணங்களுக்காக இன்னும் ஆய்வு செய்யப்படாமல் உள்ளது. இந்த நகரத்தை சுற்றியிருக்கும் முக்கியமான சுற்றுலா தலங்களாக ன்டாங்கி தேசிய பூங்கா, பவோனா மலை, கிஸா மலை, பென்ரூ மற்றும் புயில்வா கிராமத்திலுள்ள குகைகள் ஆகியவை உள்ளன.

பிரிட்டிஷாரின் படையெடுப்பு

தன்னுடைய வரலாற்றில் பெரும்பகுதி தனித்தன்மையான ஸீலிங் மக்களுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பின்பற்றி வந்த தனிப்பட்ட இடமாகவே பெரன் இருந்து வந்திருக்கிறது.

1879-ம் ஆண்டு கோஹிமாவைக் கைப்பற்றிய பிரிட்டிஷார், அதன் பின்னர் பெரன் மாவட்டத்தையும் கைப்பற்றி இம்மக்களை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

உடனடியாக கோஹிமா மற்றும் திமாபூர் மாவட்டங்களுடன் சாலை மற்றும் தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி பிரிட்டிஷார் இந்த நகரத்தை முதன்மைப் படுத்தி வந்தனர். இதன் காரணமாக அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களும் இந்த நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வரவும், வியாபாரம் செய்திடவும் வசதி உருவானது.

பெரன் மக்களின் கலாச்சாரமும், மக்களும்

மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்திலுள்ள ன்குயில்வாங்டி என்ற பகுதி தான் பெரன் மாவட்டத்தின் பழங்குடியினரான ஸீலிங் மக்களின் பூர்வீக இடமாகும். காலனியாதிக்க காலத்தில் கச்சா நாகாஸ் என்று அழைக்கப் பட்ட இந்த பழங்குடியினரின் முக்கியமான தொழில் விவசாயம் ஆகும்.

பருவ நிலைகளும் மற்றும் இந்த மண்ணின் தன்மையும் நாகாலாந்தின் வளமான மாவட்டங்களில் ஒன்றாக பெரனை வைத்திருக்க உதவுகின்றன. ஸீலிங் மக்களின் வளமான கலாச்சாரம் அவர்களின் மூதாதையர்களிடமிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டதாகும்.

நாகாலாந்தின் பிற பழங்குடியின மக்களைப் போலவே ஸீலிங் மக்களும் தனித்தன்மையான கலை மற்றும் தொல்பொருட்கள், உணவுப் பழக்கம், நடனம் மற்றும் இசை ஆகியவற்றைத் தனித்தன்மையாக கொண்டிருப்பதால் அவர்கள் மிகவும் துடிப்பான பழங்குடியின மக்களாக உள்ளனர்.

பிரிட்டிஷார் அவர்களுடன் மிஷனரி குழுக்களையும் தங்களுடன் அழைத்து வந்ததால் இந்த இடத்தின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது.

கோஹிமா மிஷன் சென்டர் என்ற கிறித்தவ மிஷனரி தன்னுடைய கிறித்தவ மத செய்திகளை பரப்பி கிறித்தவ மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது.

பெரன் மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவாக கிறிஸ்துமஸ் இருந்தாலும், பாரம்பரிய அறுவடை திருநாளான மிம்குட், செகா காடி, ஹெவா திருவிழா மற்றும் சகா—ன்கீ ஆகிய திருவிழாக்களும் இந்த வீரமிகுந்த, போர்க்குணமிக்க பழங்குடியினரை கௌரவிக்கும் பொருட்டாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

உள்பகுதிக்கு செல்வதற்கான அனுமதி (Inner Line Permit)

நாகாலாந்திற்கு சுற்றுலா வருபவர்கள் உள்பகுதி கோட்டு அனுமதிச்சீட்டு (Inner Line Permit-INP) எனப்படும் எளிமையான பயண ஏட்டினை வாங்க வேண்டியது அவசியம்.

இந்த ஏற்பாடு இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அவசியமானதாகும். புது டெல்லி, கொல்கத்தா, கௌகாத்தி மற்றும் ஷில்லாங் ஆகிய இடங்களில் இருக்கும் நாகாலாந்து இல்லம் என்ற இடங்களில் இந்த ஆவணத்தை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் திமாபூர், கோஹிமா மற்றும் மோகோக்சுங் ஆகிய நகரங்களின் துணை ஆணையரிடமும் இந்த ஆவணத்திற்காக விண்ணப்பிக்க முடியும்.

ILP எனப்படும் இந்த ஆவணத்தை வெளிநாட்டுப் பயணிகள் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது; எனினும் அவர்கள் வெளிநாடுகளுக்கான பதிவாளர் அலுவலகத்தில் நாகாலாந்தில் அவர்கள் செல்லும் மாவட்டத்தைப் பற்றி பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

பெரன் சிறப்பு

பெரன் வானிலை

சிறந்த காலநிலை பெரன்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பெரன்

  • சாலை வழியாக
    திமாபூர் மற்றும் மாநிலத் தலைநகரம் கோஹிமாவுடன் சாலை வழியாக இணைக்கப்பட்டிருப்பதால் பெரன் நகரம் உலகத்துடன் தொடர்பு பெற்றுள்ளதாக உள்ளது. இதில் திமாபூர் 77 கிமீ தொலைவிலும் மற்றும் கோஹிமா 139 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. நாகாலாந்து மாநில அரசுப் பேருந்துகளும், ஷட்டில் சர்வீஸ் வாகனங்களும் இந்த இரு இடங்களிலிருந்தும் பெரன் நகரத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பெரன் மாவட்டத்தில் இரயில் நிலையமும் கிடையாது. 77 கிமீ தொலைவில் இருக்கும் திமாபூர் இரயில் நிலையம் பெரன் மாவட்டத்திற்கு அருகிலிருக்கும் இரயில் நிலையமாகவும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் நன்றாக இணைக்கப் பட்டுள்ளதாகவும் உள்ளது. கௌகாத்தி, கொல்கத்தா மற்றும் புது டெல்லி ஆகிய நகரங்களுக்கும் இங்கிருந்து தினசரி இரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெரன்-திமாபூர் ஷட்டில் சர்வீஸ் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பெரன் நகரத்தில் விமான நிலையம் கிடையாது. 71 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் திமாபூர் விமான நிலையம் தான் பெரன் மாவட்டத்திற்கு வரும் நுழைவாயிலாக உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து கௌகாத்தி மற்றும் கொல்கத்தாவிற்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெரனுக்கு சென்று வருவதற்காக டாக்ஸிகள் மற்றும் ஷட்டில் சர்வீஸ் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun