உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

டூப்ளிக்ஸ் சிலை, பாண்டிச்சேரி

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

1742-ம் ஆண்டு முதல் 1754-ம் ஆண்டு வரையிலும் பிரெஞ்சு பாண்டிச்சேரியின் ஆளுநராக இருந்த ஜோசப் பிரான்கோயிஸ் டூப்ளிக்ஸ் சிலை கடற்கரை சாலையில் உள்ளது. இந்த சிலை நிறுவப்பட்டுள்ள இடம் தற்போது ஒரு குழந்தைகளுக்கான பூங்காவாக உள்ளது.

பாண்டிச்சேரி புகைப்படங்கள் - டூப்ளிக்ஸ் சிலை 
Image source:www.wikipedia.org
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

2.88 மீட்டர்கள் உயரமுடைய இந்த சிலை, பூங்காவின் தெற்கு எல்லையில் நிறுவப்பட்டுள்ளது. டூப்ளே பிரபுவின் சேவையை அரசாங்க ரீதியாக கௌரவிக்கும் வகையில் 1870-ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கம் இந்த சிலையை நிறுவியது. கௌபெர்ட் அவென்யூவில் இந்த சிலை நிறுவப்பட்ட அதே நேரத்தில் மற்றுமொரு சிலை பிரான்சில் நிறுவப்பட்டது.

பிரான்சு நாட்டின் காலனியாதிக்கம் இந்தியாவில் முளைவிடத் துவங்கியிருந்த ஆரம்ப காலங்களில், இந்தியாவின் பிரெஞ்சு ஆளுநராக இருந்த டூப்ளே பிரெஞ்சு ஆட்சியை இந்தியாவில் நிறுவ நிறைய சேவைகள் செய்துள்ளார் மற்றும் இவர் ஒரு மிகச் சிறந்த நிர்வாகியாகவும் அறியப்படுகிறார். வரலாறை தாங்கி நிற்கும் இந்த சிலையையும், அது நிறுவப்பட்டுள்ள சிறுவர் பூங்காவிற்கும் வருவது நல்ல அனுபவத்தைத் தரும்.

Please Wait while comments are loading...