தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க
தேடு
 
தேடு
 

பாண்டிச்சேரி வானிலை

குளிர்காலம் தான் பாண்டிச்சேரியின் அழகை ஊர் சுற்றியபடி பார்ப்பதற்கு ஏற்ற மிகச்சிறந்த காலமாகும். இந்த நாட்களில் வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாக சென்று விடும். எனவே இந்த காலகட்டங்களில் பருவநிலையானது, மகிழ்ச்சிகரமானதாக, குளிர்ச்சியானதாக மற்றும் அமைதியானதாக இருக்கும். எனவே பாண்டிச்சேரி நகரத்திற்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வருகை தருவது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.

வானிலை முன்னறிவிப்பு
Pondicherry, India 35 ℃ Sunny
காற்று: 23 from the SE ஈரப்பதம்: 50% அழுத்தம்: 1010 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 27 Mar 34 ℃93 ℉ 24 ℃ 76 ℉
Tuesday 28 Mar 36 ℃97 ℉ 24 ℃ 75 ℉
Wednesday 29 Mar 36 ℃97 ℉ 25 ℃ 78 ℉
Thursday 30 Mar 35 ℃95 ℉ 26 ℃ 78 ℉
Friday 31 Mar 36 ℃96 ℉ 26 ℃ 78 ℉
கோடைகாலம்

பாண்டிச்சேரியில் கோடைக்காலம் மிகவும் வெப்பமானதாகவும் மற்றும் வறட்சியானதாகவும் இருக்கும். எனவே கோடைகாலங்களில் பாண்டிச்சேரி செல்வதைப் பற்றி நினைக்க வேண்டாம். மார்ச் மாதம் தொடங்கி ஜுலை மாதம் முடிய நீடிக்கும் கோடை காலத்தில் பாண்டிச்சேரி 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமான இடமாக இருக்கும்.

மழைக்காலம்

ஜுலை, செப்டம்பர் மாதங்களில் சொல்லத்தக்க அளவில் மழையைப் பெறும் இடமாக பாண்டிச்சேரி இருக்கிறது. வெப்பநிலை படிப்படியாக குறைந்து கொண்டே வரும் இந்த காலகட்டங்களில் பாண்டிச்சேரிக்கு வருவது நல்லதாகும்.

குளிர்காலம்

பாண்டிச்சேரியின் குளிர்காலம் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீடித்திருக்கும். இந்த நாட்களில் வெப்பநிலையானது 17 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்படும். எனவே குளிர்காலத்தை பாண்டிச்சேரிக்கு வருவதற்கு மிகவும் ஏற்ற பருவமாக குறிப்பிடலாம்.