பொன்முடி மலைவாசஸ்தலத்துக்கு நீங்கள் வரும்போது கண்டிப்பாக கோல்டன் வேல்லி எனும் அற்புத சுற்றுலா அனுபவத்தை சுகித்திட மறந்து விடாதீர்கள். இந்த பள்ளத்தாக்கு சிற்றாறுகளும், நீரோடைகளும், பசுமை மாறா மரங்களும் சூழ இயற்கையின் எழில் சித்திரமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
கோல்டன் வேல்லி வழியாக பாயும் நதி ஒன்றை நீங்கள் இங்கு பார்க்கலாம். இந்த நதி மிகவும் பாதுகாப்பானது என்பதால் நீங்கள் உங்கள் குழந்தைகளோடு சந்தோஷமான நேரத்தை இங்கு கழிக்கலாம். அதோடு புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்கள் தேன் நிலவுக்கு கோல்டன் வேல்லி வருவது வெகுப் பொருத்தமாக இருக்கும்.
கோல்டன் வேல்லி டிரெக்கிங் பிரியர்களின் சொர்க்க பூமியாகவே திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்த பள்ளத்தாக்கு அமைந்திருக்கும் பகுதிகளில் கடைகள் அதிகமாக இல்லாததால் நீங்கள் கட்டாயம் உணவு மற்றும் குடிநீரினை டிரெக்கிங்கின் போது எடுத்து வருவது முக்கியம்.