Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பொன்முடி » வானிலை

பொன்முடி வானிலை

பொன்முடி மலைவாசஸ்தலத்தை அக்டோபேரிலிருந்து, மார்ச் மாதம் வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : பொன்முடியின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 34 டிகிரியும், குறைந்தபட்சமாக 21 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : பொன்முடியின் மழைக் காலங்களில் கடும் மழைப் பொழிவு இருக்கும். எனவே இந்தக் காலங்களில் டிரெக்கிங், ஹைக்கிங் போன்ற செயல்களில் ஈடுபட சிரமமாதலால் பயணிகள் மழைக் காலங்களில் பொன்முடி சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : கேரளாவின் மற்ற மலைப்பிரதேசங்களை போன்றே பொன்முடியிலும் பனிக் காலங்கள் மிகவும் குளிர்ச்சியானதாகவே இருக்கும். எனவே பனிக் காலங்களில் பொன்முடி சுற்றுலா வருபவர்கள் அடர்த்தியான ஆடைகளை உடுத்திக் கொள்வது சிறந்தது.