Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புனே » வானிலை

புனே வானிலை

குளிர்காலம் மற்றும் மழைக்காலமே புனே நகருக்கு விஜயம் செய்ய உகந்த காலமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

மார்ச்சிலிருந்து ஜூலை வரை நீடிக்கும் கோடைக்காலமானது சற்று வெப்பத்துடனேயே காணப்படும். காலையில் குளிரான வெப்ப நிலையில் துவங்கி பகல் போகப்போக வெப்பம் அதிகரிக்கும். இருந்தாலும் இரவில் வெப்பநிலை குறைந்து காற்றோட்ட்த்துடன் குளுமையுடன் காணப்படும். பொதுவாக இக்காலகட்ட்த்தில் வெப்பநிலை அதிகபட்சம் 380 C யிலிருந்து 200 C வரை மட்டுமே உள்ளது.

மழைக்காலம்

ஜூலை மாத மத்தியில் இருந்து அக்டோபர் மாதம் வரையில் புனேயில் மழைக்காலம் நீடிக்கின்றது. வருடந்தோறும் நல்ல மழைப்பொழிவை புனே பெறுகிறது. வெப்பநிலையும் 180 C யிலிருந்து 300 C வரை மிதமானதாகவே காணப்படுகிறது. மழைக்காலத்தில் புனே பார்ப்பதற்கு மிகுந்த பசுமையுடனும் எழிலுடனும் விளங்குகிறது.

குளிர்காலம்

சுற்றுலாப்பயணிகளும், வருகை தருபவர்களும் புனே நகருக்கு குளிர் காலத்தில் விஜயம் செய்வதையே பெரிதும் விரும்புகின்றனர். நவம்பர் மாத்த்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் குளிர்காலம் குளுமையான பகலையும் அதிகக் குளிரான இரவையும் கொண்டிருக்கும். இப்பருவத்தில் வெப்பநிலை 120 C ஆக குறைந்து காணப்படுகிறது. இக்கால கட்ட்த்தில் பயணிகள் அதிகம் வருவதால் தங்கும் இடங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றின் வாடகை அதிகமாக காணப்படும்.